• Apr 18 2026

‘மன்னர்கள் வேண்டாம்’! ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக ஆவேசமாக முழங்கிய மக்கள்

Chithra / Mar 29th 2026, 1:43 pm
image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அமெரிக்காவின் பிரதான நகரங்கள் எங்கும் பாரிய மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன.


மில்லியன் கணக்கான மக்கள் பங்கேற்ற ‘மன்னர்கள் வேண்டாம்’ (No Kings) போராட்டத்தின் மூன்றாம் கட்டமாக இந்தப் போராட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.


டொனால்ட் ட்ரம்ப் அமுல்படுத்தி வரும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளே இந்தப் போராட்டங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளன. 


குறிப்பாக, ஈரானுடனான போர் பதற்றங்கள். கூட்டாட்சி குடியேற்றச் சட்டங்களை அமுல்படுத்தியமை. நாட்டில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் போராட்டங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளன. 


நியூயோர்க், வொஷிங்டன் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட அமெரிக்காவின் அனைத்துப் பிரதான நகரங்களிலும் இந்தப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


போராட்டத்தின் போது ஜனாதிபதி ட்ரம்ப், துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் நிர்வாகத்தின் முக்கிய அதிகாரிகளின் உருவப்பொம்மைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாகச் சென்றனர்.


அவர்களைப் பதவியில் இருந்து நீக்குமாறும், உடனடியாகக் கைது செய்யுமாறும் போராட்டக்காரர்கள் ஆவேசமாக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.


இந்தத் தொடர் போராட்டங்களால் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அரசியல் ரீதியான பெரும் பதற்றமும் நிலவி வருகின்றது.

‘மன்னர்கள் வேண்டாம்’ ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக ஆவேசமாக முழங்கிய மக்கள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அமெரிக்காவின் பிரதான நகரங்கள் எங்கும் பாரிய மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன.மில்லியன் கணக்கான மக்கள் பங்கேற்ற ‘மன்னர்கள் வேண்டாம்’ (No Kings) போராட்டத்தின் மூன்றாம் கட்டமாக இந்தப் போராட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.டொனால்ட் ட்ரம்ப் அமுல்படுத்தி வரும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளே இந்தப் போராட்டங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளன. குறிப்பாக, ஈரானுடனான போர் பதற்றங்கள். கூட்டாட்சி குடியேற்றச் சட்டங்களை அமுல்படுத்தியமை. நாட்டில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் போராட்டங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளன. நியூயோர்க், வொஷிங்டன் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட அமெரிக்காவின் அனைத்துப் பிரதான நகரங்களிலும் இந்தப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.போராட்டத்தின் போது ஜனாதிபதி ட்ரம்ப், துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் நிர்வாகத்தின் முக்கிய அதிகாரிகளின் உருவப்பொம்மைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாகச் சென்றனர்.அவர்களைப் பதவியில் இருந்து நீக்குமாறும், உடனடியாகக் கைது செய்யுமாறும் போராட்டக்காரர்கள் ஆவேசமாக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.இந்தத் தொடர் போராட்டங்களால் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அரசியல் ரீதியான பெரும் பதற்றமும் நிலவி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement