கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கிராஞ்சி பகுதியில், மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்படுகின்ற கனிம மணல் அகழ்வு மற்றும் காற்றாலை திட்டங்களுக்கு எதிராக இன்று (வியாழக்கிழமை) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கிராம மக்கள் மற்றும் பல்வேறு பொது அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இலங்கையில் காற்றாலை மற்றும் கனிம மணல் அகழ்வு போன்ற திட்டங்கள் மக்களின் வாழ்வாதாரத்தையும் மண்வளத்தையும் சிதைக்கும் வகையில் முன்னெடுக்கப்படுவதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.
கடந்த கால அரசாங்கங்கள் அடையாளம் கண்ட இடங்களிலேயே தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கமும் இத்தகைய திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனால் பல்வேறு கிராமங்கள் தொடர்ச்சியாக பாதிப்பை சந்தித்து வருவதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கிராஞ்சி பகுதியில் மட்டும் சுமார் 8000 தென்னம் பிள்ளைகள் அழிக்கப்பட்டு அபிவிருத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், இது தங்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
மேலும், கிராஞ்சி பகுதியில் சுமார் 2000 குடும்பங்கள் தென்னைச் செய்கையை நம்பி வாழ்ந்து வருவதாகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய திட்டங்களை வன்மையாக எதிர்ப்பதாகவும் அவர்கள் கூறினர்.
மக்களின் வளங்களும் நிலமும் சுரண்டப்படுவதை கண்டித்து வலுவான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், இத்திட்டங்களை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் அரசியல் பிரதிநிதிகள், மத தலைவர்கள் மற்றும் பிரதேச மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
வாழ்வாதாரத்தை அழிக்கும் அபிவிருத்தி தேவையில்லை கிராஞ்சியில் மக்கள் போராட்டம் கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கிராஞ்சி பகுதியில், மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்படுகின்ற கனிம மணல் அகழ்வு மற்றும் காற்றாலை திட்டங்களுக்கு எதிராக இன்று (வியாழக்கிழமை) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.கிராம மக்கள் மற்றும் பல்வேறு பொது அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இலங்கையில் காற்றாலை மற்றும் கனிம மணல் அகழ்வு போன்ற திட்டங்கள் மக்களின் வாழ்வாதாரத்தையும் மண்வளத்தையும் சிதைக்கும் வகையில் முன்னெடுக்கப்படுவதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.கடந்த கால அரசாங்கங்கள் அடையாளம் கண்ட இடங்களிலேயே தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கமும் இத்தகைய திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனால் பல்வேறு கிராமங்கள் தொடர்ச்சியாக பாதிப்பை சந்தித்து வருவதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.கிராஞ்சி பகுதியில் மட்டும் சுமார் 8000 தென்னம் பிள்ளைகள் அழிக்கப்பட்டு அபிவிருத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், இது தங்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.மேலும், கிராஞ்சி பகுதியில் சுமார் 2000 குடும்பங்கள் தென்னைச் செய்கையை நம்பி வாழ்ந்து வருவதாகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய திட்டங்களை வன்மையாக எதிர்ப்பதாகவும் அவர்கள் கூறினர்.மக்களின் வளங்களும் நிலமும் சுரண்டப்படுவதை கண்டித்து வலுவான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், இத்திட்டங்களை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் அரசியல் பிரதிநிதிகள், மத தலைவர்கள் மற்றும் பிரதேச மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.