• May 12 2026

அடுத்த 48 மணித்தியாலங்கள் மிக அவதானம் - கடலுக்குச் செல்ல வேண்டாம்! அவசர எச்சரிக்கை

Chithra / May 12th 2026, 8:10 am
image

காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது இலங்கைக்கு தென் கிழக்கே காணப்படுவதால் தெற்கு, கிழக்கு மற்றும் வடக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். எனவே மீனவர்கள்  கடற்பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்ப்பது சிறந்தது என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார். 


அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது   


வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் தற்போது காணப்படும் காற்றழுத்த தாழ்வு நிலையானது தொடர்ந்து வடக்கு வடகிழக்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதன் காரணமாக தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளும் அடங்கலாக இலங்கையின் பல பகுதிகளுக்கும் பரவலாக கிடைக்கும் மழை நாளை வரை தொடரும் வாய்ப்புள்ளது. 


ஊவா, மத்திய, வட மத்திய, மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களைப் பொறுத்தவரை அடுத்த 48 மணித்தியாலங்கள் மிக முக்கியமானவை. 


இந்த மாகாணங்களில் தொடர்ச்சியாக மழை கிடைத்து வருவதாலும் பல குளங்கள் மற்றும் ஆறுகளின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாலும் இவற்றுக்கு அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் அடுத்த 48 மணித்தியாலங்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம். 


அத்தோடு மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தொடரும் கனமழை காரணமாக நிலச்சரிவு எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன.


இந்த மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு மழை தொடரும் வாய்ப்புள்ளதனால் இப்பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருப்பது சிறந்தது. 


காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது இலங்கைக்கு தென் கிழக்கே காணப்படுவதால் தெற்கு, கிழக்கு மற்றும் வடக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படக்கூடும். அத்தோடு கிழக்கு மற்றும் வடக்கு கடற்பிரதேசங்களில் நாளை காற்று மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் வீசக் கூடும் என்பதனால் மீனவர்கள் எதிர்வரும் 14.05.2026 வரை வடக்கு, கிழக்கு தெற்கு கடற்பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்ப்பது சிறந்தது. என தெரிவித்துள்ளார். 

அடுத்த 48 மணித்தியாலங்கள் மிக அவதானம் - கடலுக்குச் செல்ல வேண்டாம் அவசர எச்சரிக்கை காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது இலங்கைக்கு தென் கிழக்கே காணப்படுவதால் தெற்கு, கிழக்கு மற்றும் வடக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். எனவே மீனவர்கள்  கடற்பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்ப்பது சிறந்தது என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது   வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் தற்போது காணப்படும் காற்றழுத்த தாழ்வு நிலையானது தொடர்ந்து வடக்கு வடகிழக்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளும் அடங்கலாக இலங்கையின் பல பகுதிகளுக்கும் பரவலாக கிடைக்கும் மழை நாளை வரை தொடரும் வாய்ப்புள்ளது. ஊவா, மத்திய, வட மத்திய, மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களைப் பொறுத்தவரை அடுத்த 48 மணித்தியாலங்கள் மிக முக்கியமானவை. இந்த மாகாணங்களில் தொடர்ச்சியாக மழை கிடைத்து வருவதாலும் பல குளங்கள் மற்றும் ஆறுகளின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாலும் இவற்றுக்கு அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் அடுத்த 48 மணித்தியாலங்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம். அத்தோடு மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தொடரும் கனமழை காரணமாக நிலச்சரிவு எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன.இந்த மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு மழை தொடரும் வாய்ப்புள்ளதனால் இப்பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருப்பது சிறந்தது. காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது இலங்கைக்கு தென் கிழக்கே காணப்படுவதால் தெற்கு, கிழக்கு மற்றும் வடக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படக்கூடும். அத்தோடு கிழக்கு மற்றும் வடக்கு கடற்பிரதேசங்களில் நாளை காற்று மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் வீசக் கூடும் என்பதனால் மீனவர்கள் எதிர்வரும் 14.05.2026 வரை வடக்கு, கிழக்கு தெற்கு கடற்பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்ப்பது சிறந்தது. என தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement