• Sep 11 2025

நீண்ட தூர பேருந்துகள், வேன்களுக்கு புதிய விதிமுறை! போக்குவரத்து அமைச்சரின் அறிவிப்பு

Chithra / Sep 11th 2025, 2:37 pm
image

 

நீண்ட தூர பயணங்களில் மக்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மற்றும் வேன்களுக்கு விரைவில் புதிய விதிமுறை அமுல்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு உரையாற்றிய அமைச்சர், 

இந்த ஒழுங்குமுறை 06 முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டது என்றும் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 100 கி.மீ.க்கு மேல் பயணிக்கும் பேருந்துகள், வேன்கள்  எல்லை தாண்டிய பயணங்கள் மேற்கொள்வதற்கு முன் வாகன ஆய்வுச் சான்றிதழைப் பெறுவது கட்டாயமாக்கப்படும்.

இதன்போது, டயர்கள், கண்ணாடிகள் மற்றும் பிரேக்குகளின் நிலை போன்றவை ஆய்வு செய்யப்படும்.

மாகாணங்களைக் கடக்கும் அனைத்து பேருந்துகள் மற்றும் வேன்களும் பயணத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் இந்த ஆய்வை நடத்தி தேவையான சான்றிதழைப் பெற வேண்டும். இதுவே புதிய சட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற வாகனங்களில் சுற்றுலாக்களில் ஈடுபடும் பொதுமக்கள், பயணத்திற்கு முன்னர் வாகனம் தேவையான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

பொது போக்குவரத்தில் பாதுகாப்பை தேவையான விதிமுறைகள் மூலம் மட்டுமே உறுதி செய்ய முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

நீண்ட தூர பேருந்துகள், வேன்களுக்கு புதிய விதிமுறை போக்குவரத்து அமைச்சரின் அறிவிப்பு  நீண்ட தூர பயணங்களில் மக்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மற்றும் வேன்களுக்கு விரைவில் புதிய விதிமுறை அமுல்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.இது தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு உரையாற்றிய அமைச்சர், இந்த ஒழுங்குமுறை 06 முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டது என்றும் தெரிவித்துள்ளார்.அதன்படி, 100 கி.மீ.க்கு மேல் பயணிக்கும் பேருந்துகள், வேன்கள்  எல்லை தாண்டிய பயணங்கள் மேற்கொள்வதற்கு முன் வாகன ஆய்வுச் சான்றிதழைப் பெறுவது கட்டாயமாக்கப்படும்.இதன்போது, டயர்கள், கண்ணாடிகள் மற்றும் பிரேக்குகளின் நிலை போன்றவை ஆய்வு செய்யப்படும்.மாகாணங்களைக் கடக்கும் அனைத்து பேருந்துகள் மற்றும் வேன்களும் பயணத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் இந்த ஆய்வை நடத்தி தேவையான சான்றிதழைப் பெற வேண்டும். இதுவே புதிய சட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இதுபோன்ற வாகனங்களில் சுற்றுலாக்களில் ஈடுபடும் பொதுமக்கள், பயணத்திற்கு முன்னர் வாகனம் தேவையான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.பொது போக்குவரத்தில் பாதுகாப்பை தேவையான விதிமுறைகள் மூலம் மட்டுமே உறுதி செய்ய முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement