வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
மனிதர்கள் கடைசியாக நிலவுக்குப் பயணம் செய்து அரை நூற்றாண்டுக்கும் மேலான நிலையில், நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் கடந்த 02ஆம் திகதி அதிகாலையில் 4 விண்வெளி வீரர்களுடன் நிலவுக்கான பயணத்தை ஆரம்பித்தது.
ஏவப்பட்ட 2 நாட்கள், 5 மணி நேரம் மற்றும் 24 நிமிடங்களில், விண்கலம் முக்கிய மைல்கல்லை அடைந்தது. தற்போது, விண்கலம் பூமியுடன் ஒப்பிடும் போது நிலவுக்கு மிக அருகாமையில் நிலை கொண்டுள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விண்கலத்திலிருந்து பேசிய விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா கோச், “விண்கலத்தின் ஜன்னல் வழியாக நிலவைப் பார்க்கும் அனுபவம் மிக அற்புதமாக உள்ளது” எனத் தெரிவித்தார்.
பயணத்தின் அடுத்த கட்டமாக விண்கலம் நிலவின் ஈர்ப்பு விசைப் பகுதிக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் மனித வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
கடந்த 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அப்பல்லோ 13 விண்கலத்தால் நிலைநாட்டப்பட்ட சாதனையை இவர்கள் முறியடித்துள்ளனர்.
ஆர்டெமிஸ் II விண்கலத்தின் விண்வெளி வீரர்கள் நேற்று நிலவின் மிகவும் தொலைதூர பகுதிக்குச் சென்றதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.
இதற்கு முன்னர் இந்த சாதனை 2 லட்சத்து 48 ஆயிரத்து 655 மைல்கல்லாக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
விண்வெளியில் புதிய மைல்கல்; ஆர்டெமிஸ் II வரலாற்றுச் சாதனை வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது. மனிதர்கள் கடைசியாக நிலவுக்குப் பயணம் செய்து அரை நூற்றாண்டுக்கும் மேலான நிலையில், நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் கடந்த 02ஆம் திகதி அதிகாலையில் 4 விண்வெளி வீரர்களுடன் நிலவுக்கான பயணத்தை ஆரம்பித்தது. ஏவப்பட்ட 2 நாட்கள், 5 மணி நேரம் மற்றும் 24 நிமிடங்களில், விண்கலம் முக்கிய மைல்கல்லை அடைந்தது. தற்போது, விண்கலம் பூமியுடன் ஒப்பிடும் போது நிலவுக்கு மிக அருகாமையில் நிலை கொண்டுள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.விண்கலத்திலிருந்து பேசிய விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா கோச், “விண்கலத்தின் ஜன்னல் வழியாக நிலவைப் பார்க்கும் அனுபவம் மிக அற்புதமாக உள்ளது” எனத் தெரிவித்தார்.பயணத்தின் அடுத்த கட்டமாக விண்கலம் நிலவின் ஈர்ப்பு விசைப் பகுதிக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் மனித வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது. கடந்த 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அப்பல்லோ 13 விண்கலத்தால் நிலைநாட்டப்பட்ட சாதனையை இவர்கள் முறியடித்துள்ளனர். ஆர்டெமிஸ் II விண்கலத்தின் விண்வெளி வீரர்கள் நேற்று நிலவின் மிகவும் தொலைதூர பகுதிக்குச் சென்றதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர். இதன்போது அவர்கள் பூமியிலிருந்து 2 லட்சத்து 52 ஆயிரத்து 752 மைல்கல் தொலைவிற்குப் பயணித்துள்ளதாகப் பதவாகியுள்ளது. இதற்கு முன்னர் இந்த சாதனை 2 லட்சத்து 48 ஆயிரத்து 655 மைல்கல்லாக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.