• May 21 2025

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் புதிய வசதி!

Chithra / May 21st 2025, 8:16 am
image


அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று (21) முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. 

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம-குருநாகல் பகுதியின் வெளியேறும் வாயில்களில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. 

35 இடை மாறல்கள் மற்றும் 119 வௌியேறும் வாயில்களில் இன்று முதல் குறித்த சேவை வசதிகள் செயற்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

நாட்டில் திறமையான போக்குவரத்து சேவையை நிறுவுவதற்கும், புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களின் வாழ்க்கையை எளிதாகவும் வேகமாகவும் மாற்றுவதற்கும், அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் கொள்கையின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ள திட்டத்தின்படி இது ஆரம்பிக்கப்படவுள்ளதாக  போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் புதிய வசதி அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று (21) முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம-குருநாகல் பகுதியின் வெளியேறும் வாயில்களில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. 35 இடை மாறல்கள் மற்றும் 119 வௌியேறும் வாயில்களில் இன்று முதல் குறித்த சேவை வசதிகள் செயற்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நாட்டில் திறமையான போக்குவரத்து சேவையை நிறுவுவதற்கும், புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களின் வாழ்க்கையை எளிதாகவும் வேகமாகவும் மாற்றுவதற்கும், அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் கொள்கையின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ள திட்டத்தின்படி இது ஆரம்பிக்கப்படவுள்ளதாக  போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement