• Jan 31 2026

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை - பலர் கைது!

Chithra / Jan 30th 2026, 3:09 pm
image


நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பலர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். 


இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சுமார் 29744 பேர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.


இதேவேளை, இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் 18 பேரும், சந்தேகத்தின் பேரில் 560 பேரும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 297 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 161 பேரும், கவனக்குறைவாக வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 78 சாரதிகளும், மதுபோதையில் வாகனங்களை செலுத்தியமை தொடர்பில்  428 சாரதிகளும், ஏனைய போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில்  4473 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை - பலர் கைது நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பலர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சுமார் 29744 பேர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.இதேவேளை, இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் 18 பேரும், சந்தேகத்தின் பேரில் 560 பேரும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 297 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 161 பேரும், கவனக்குறைவாக வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 78 சாரதிகளும், மதுபோதையில் வாகனங்களை செலுத்தியமை தொடர்பில்  428 சாரதிகளும், ஏனைய போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில்  4473 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement