திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உப்பூறல், சீனன் வெளி, நல்லூர் ஆகிய கிராமங்களில் கடந்த இரண்டு மாதங்களாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகின்றது, காட்டு யானைகளின் தொல்லைகளால் பயன் தரும் தென்னை மரங்கள், மற்றும் வீடுகளையும் யானைகள் துவம்சம் செய்து வருகின்றது.
என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்டச் செயலாளர் சின்ன மோகன் இன்று (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த சில தினங்களாக உப்பூறல் கிராமத்தில் 50 க்கும் மேற்பட்ட பயன் தரும் தென்னைமரங்களையும், ஆறுக்கும் மேற்பட்ட வீடுகளையும் காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளது. அத்தோடு வீட்டிலிருந்த வீட்டு உபகரணங்களையும் காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன.
யானைகளால் சேதமாக்கப்பட்ட வீடுகளுக்கு இதுவரையும் அரசாங்கத்தினால் நஷ்டஈடுகள் கூட வழங்கப்படவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர் என்றார்.
எனவே இது விடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு யானைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈட்டினை வழங்க முன் வரவேண்டும், நிரந்தர தீர்வாக யானை வேலிகள் அமைக்கப்படவேண்டும், மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் அச்சத்தில் வாழ்கின்றனர். பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இவ் விடயத்தில் உடன் கவனம் எடுத்து நிரந்தர தீர்வைப் பெற்றுக்கொடுங்கள் என சின்ன மோகன் அவசர வேண்டு கோள்விடுக்கின்றார்.
வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பல கிராமங்கள் காட்டு யானைகளால் பாதிப்பு திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உப்பூறல், சீனன் வெளி, நல்லூர் ஆகிய கிராமங்களில் கடந்த இரண்டு மாதங்களாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகின்றது, காட்டு யானைகளின் தொல்லைகளால் பயன் தரும் தென்னை மரங்கள், மற்றும் வீடுகளையும் யானைகள் துவம்சம் செய்து வருகின்றது.என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்டச் செயலாளர் சின்ன மோகன் இன்று (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த சில தினங்களாக உப்பூறல் கிராமத்தில் 50 க்கும் மேற்பட்ட பயன் தரும் தென்னைமரங்களையும், ஆறுக்கும் மேற்பட்ட வீடுகளையும் காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளது. அத்தோடு வீட்டிலிருந்த வீட்டு உபகரணங்களையும் காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன.யானைகளால் சேதமாக்கப்பட்ட வீடுகளுக்கு இதுவரையும் அரசாங்கத்தினால் நஷ்டஈடுகள் கூட வழங்கப்படவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர் என்றார்.எனவே இது விடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு யானைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈட்டினை வழங்க முன் வரவேண்டும், நிரந்தர தீர்வாக யானை வேலிகள் அமைக்கப்படவேண்டும், மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் அச்சத்தில் வாழ்கின்றனர். பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இவ் விடயத்தில் உடன் கவனம் எடுத்து நிரந்தர தீர்வைப் பெற்றுக்கொடுங்கள் என சின்ன மோகன் அவசர வேண்டு கோள்விடுக்கின்றார்.