நாடு தற்போது முகங் கொடுத்து வருகின்ற ஆபத்தான காரணிகளான நச்சு மருந்துகள் மற்றும் நச்சு போதைப் பொருள் கடத்தல் போன்றவற்றின் அச்சுறுத்தலை ஒழிப்பதை நோக்காக கொண்டு "நாடே ஒன்றாக” எனும் நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி அவர்களினால் இன்று 2025.10.30 ஆம் திகதி மு.ப 10.00 மணிக்கு கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வை முன்னிட்டு தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதிஅவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க அலுவலக உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கப் பட்டதோடு, இது தொடர்பாக அனைத்து உத்தியோகத்தர்களாலும் சத்தியப் பிரமாணமும் மேற்கொள்ளப் பட்டது.
இதில் ஜனாதிபதியின் உரையும் நேரலை வாயிலாக மல்டி மீடியா பல்லூடகம் வாயிலாக தெளிவூட்டப்பட்டன. இதில் உதவி பிரதேச செயலாளர், நிருவாக உத்தியோகத்தர் உட்பட சக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
நச்சுப் போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டம் நாடு தற்போது முகங் கொடுத்து வருகின்ற ஆபத்தான காரணிகளான நச்சு மருந்துகள் மற்றும் நச்சு போதைப் பொருள் கடத்தல் போன்றவற்றின் அச்சுறுத்தலை ஒழிப்பதை நோக்காக கொண்டு "நாடே ஒன்றாக” எனும் நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி அவர்களினால் இன்று 2025.10.30 ஆம் திகதி மு.ப 10.00 மணிக்கு கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வை முன்னிட்டு தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதிஅவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க அலுவலக உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கப் பட்டதோடு, இது தொடர்பாக அனைத்து உத்தியோகத்தர்களாலும் சத்தியப் பிரமாணமும் மேற்கொள்ளப் பட்டது. இதில் ஜனாதிபதியின் உரையும் நேரலை வாயிலாக மல்டி மீடியா பல்லூடகம் வாயிலாக தெளிவூட்டப்பட்டன. இதில் உதவி பிரதேச செயலாளர், நிருவாக உத்தியோகத்தர் உட்பட சக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.