தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள நெய்தல் நகர், அக்கரைச்சேனை பகுதிகளிலுள்ள வீடுகள் இன்று காலை விசேட டெங்கு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.
மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி ஹில்மி முகைதீன் ஆலோசனைக்கு அமைவாக இவ் டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இவ் டெங்கு பரிசோதனையில் பொலிஸார், கடற்படையினர்,பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,டெங்கு ஒழிப்பு பிரிவினர் என பலரும் ஈடுபட்டனர்.
இதன்போது டெங்கு பரவும் வகையில் வீட்டுச் சூழலை வைத்திருந்த வீட்டுக்காணி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு ஆலோசனைகளும் வழங்கப்பட்டிருந்தன.
மூதூரில் தேசிய டெங்கு வார பரிசோதனை தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள நெய்தல் நகர், அக்கரைச்சேனை பகுதிகளிலுள்ள வீடுகள் இன்று காலை விசேட டெங்கு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி ஹில்மி முகைதீன் ஆலோசனைக்கு அமைவாக இவ் டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இவ் டெங்கு பரிசோதனையில் பொலிஸார், கடற்படையினர்,பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,டெங்கு ஒழிப்பு பிரிவினர் என பலரும் ஈடுபட்டனர்.இதன்போது டெங்கு பரவும் வகையில் வீட்டுச் சூழலை வைத்திருந்த வீட்டுக்காணி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு ஆலோசனைகளும் வழங்கப்பட்டிருந்தன.