மர்மமான முறையில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இப்பாகமுவ, யகல்ல பகுதியில் உள்ள மதகு ஒன்றின் அருகில் இளைஞன் ஒருவரின் சடலம் ஒன்று காணப்படுவதாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.
தகவலையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் உயிரிழந்த இளைஞனின் சடலத்தை மீட்டனர்.
இப்பகமுவ, பபுலுவ பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞன் நேற்று இரவு முதல் காணவில்லை என்று இன்று காலை பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
விலங்கு பண்ணையில் தொழிலாளியாக பணிபுரிந்த இளைஞன் ஒருவர், நேற்று இரவு தனது பணியை முடித்து வீடு திரும்புகிறேன் என்று குடும்பத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
எனினும் இரவு 10.00 மணி கடந்தும் குறித்த இளைஞரிடமிருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று குடும்பத்தினர் பொலிஸாருக்கு முறைப்பாடளித்துள்ளனர்.
முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட நிலையிலேயே குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் உயிர்மாய்த்தாரா அல்லது இளைஞன் கொலை செய்யப்பட்டாரா என்ற நிலையில் கோகரெல்ல பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மர்மமான முறையில் இளைஞன் உயிரிழப்பு; உயிர்மாய்ப்பா - கொலையா பொலிஸார் தீவிர விசாரணை மர்மமான முறையில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இப்பாகமுவ, யகல்ல பகுதியில் உள்ள மதகு ஒன்றின் அருகில் இளைஞன் ஒருவரின் சடலம் ஒன்று காணப்படுவதாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர். தகவலையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் உயிரிழந்த இளைஞனின் சடலத்தை மீட்டனர். இப்பகமுவ, பபுலுவ பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த இளைஞன் நேற்று இரவு முதல் காணவில்லை என்று இன்று காலை பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. விலங்கு பண்ணையில் தொழிலாளியாக பணிபுரிந்த இளைஞன் ஒருவர், நேற்று இரவு தனது பணியை முடித்து வீடு திரும்புகிறேன் என்று குடும்பத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளார். எனினும் இரவு 10.00 மணி கடந்தும் குறித்த இளைஞரிடமிருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று குடும்பத்தினர் பொலிஸாருக்கு முறைப்பாடளித்துள்ளனர். முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட நிலையிலேயே குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் உயிர்மாய்த்தாரா அல்லது இளைஞன் கொலை செய்யப்பட்டாரா என்ற நிலையில் கோகரெல்ல பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.