• May 17 2025

வெருகலில் அனுஸ்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்..!

Sharmi / May 16th 2025, 10:59 am
image

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு வெருகல் -இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியில் இன்று (16) காலை முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறப்பட்டதோடு, நினைவஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.

இதனை வெருகல் -இலங்கைத்துறை முகத்துவாரம் பிரதேச மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் உயிர் நீத்தவர்களுக்காக சுடரேற்றி பூ தூவி நினைவஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.




வெருகலில் அனுஸ்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு வாரம். முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு வெருகல் -இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியில் இன்று (16) காலை முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறப்பட்டதோடு, நினைவஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.இதனை வெருகல் -இலங்கைத்துறை முகத்துவாரம் பிரதேச மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.மேலும் முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் உயிர் நீத்தவர்களுக்காக சுடரேற்றி பூ தூவி நினைவஞ்சலியும் செலுத்தப்பட்டது.இந் நிகழ்வில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement