• May 15 2026

மருதங்கேணியிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

Ziya / May 14th 2026, 3:32 pm
image

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு இளைஞர்களால்  இன்றைய தினம் வடமாராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு  முன்னால் முள்ளிவாய்க்கால் நினைவு நினைவேந்தல் நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது. 


நினைவேந்தலில் பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காகவும்,  மாவீரர்களுக்காகவும் இரண்டு நிமிடங்கள் அகவணக்கச் செலுத்தப்பட்டது.  தொடர்ந்து முள்ளிவாய்க்கால் இனப்படுபடு கொலையை  நினைவுபடுத்தும் விதமாக உப்பு கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது 


இந் நிகழ்வில் வடமராட்சிக் கிழக்கு இளைஞர்கள், நிர்வாகிகள்,  உறுப்பினர்கள், பருத்தித்துறை நகர சபை  உறுப்பினர் ஜெயானந்தம்  ஜெயகோபி,  பருத்தித்துறை  பிரதேச சபை உறுப்பினர்  கணைச்செல்வன், முன்னாள் உறுப்பினர்  ஆனந்தராஜா சுரேஷ்குமார், காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவர் முரளீதாரன்,  உட்பட பலரும் கலந்து கொண்டனர் 


மருதங்கேணியிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு இளைஞர்களால்  இன்றைய தினம் வடமாராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு  முன்னால் முள்ளிவாய்க்கால் நினைவு நினைவேந்தல் நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது. நினைவேந்தலில் பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காகவும்,  மாவீரர்களுக்காகவும் இரண்டு நிமிடங்கள் அகவணக்கச் செலுத்தப்பட்டது.  தொடர்ந்து முள்ளிவாய்க்கால் இனப்படுபடு கொலையை  நினைவுபடுத்தும் விதமாக உப்பு கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது இந் நிகழ்வில் வடமராட்சிக் கிழக்கு இளைஞர்கள், நிர்வாகிகள்,  உறுப்பினர்கள், பருத்தித்துறை நகர சபை  உறுப்பினர் ஜெயானந்தம்  ஜெயகோபி,  பருத்தித்துறை  பிரதேச சபை உறுப்பினர்  கணைச்செல்வன், முன்னாள் உறுப்பினர்  ஆனந்தராஜா சுரேஷ்குமார், காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவர் முரளீதாரன்,  உட்பட பலரும் கலந்து கொண்டனர் 

Advertisement

Advertisement

Advertisement