• May 17 2026

செம்பியன்பற்று வடக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கல் நிகழ்வும்!

Ziya / May 16th 2026, 3:20 pm
image

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கிழக்கு செம்பியன்பற்று வடக்கிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கல் நிகழ்வும் இன்று காலை 9:30 மணியளவில் செம்பியன்பற்று தேவாலயம் முன்பாக உணர்வு ரீதியாக இடம்பெற்றது 


குறித்த நிகழ்வின் ஆரம்பத்தில் செம்பியன் பற்று பங்கு தந்தை யாஸ்டின் ஆதர் அவர்களால் விசேட வழிபாடு ஒன்று வழங்கப்பட்டது பின்னர் ஊடகவியலாளர் லின்ரன் தலைமையில் நிகழ்வு ஆரம்பமானது 


நிகழ்வில் இறுதிப்போரில் தனது தந்தையையும் மகனையும் இழந்த குடும்பஸ்தர் ஒருவரால் பொது ஈகைச் சுடர் ஏற்றப்பட்டது.  


அதனை தொடர்ந்து இறுதிப்போரில் உயிர் நீத்த வீரர்களுக்கும் உறவுகளுக்காகவும்அகவணக்கம் செலுத்தப்பட்டது தொடர்ந்து மலர் அஞ்சலி இடம்பெற்றது. அதனை தொடர்ந்து தமிழின படுகொலையை ஞாபகப்படுத்தும் முகமாக உப்பு கஞ்சி வழங்கப்பபட்டது 


குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மத குருமார்கள் புலம்பெயர் மக்கள் சிறுவர்கள் இளைஞர்கள் பெண்கள் பொதுமக்கள் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் அகஸ்டின் மற்றும் பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெய கோபி மற்றும் சிரேஸ்ட ஊடகவியலாளர் காண்டீபன் மற்றும் குடத்தனை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ரெஜி என பலரும் கலந்து கொண்டனர்

செம்பியன்பற்று வடக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கல் நிகழ்வும் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கிழக்கு செம்பியன்பற்று வடக்கிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கல் நிகழ்வும் இன்று காலை 9:30 மணியளவில் செம்பியன்பற்று தேவாலயம் முன்பாக உணர்வு ரீதியாக இடம்பெற்றது குறித்த நிகழ்வின் ஆரம்பத்தில் செம்பியன் பற்று பங்கு தந்தை யாஸ்டின் ஆதர் அவர்களால் விசேட வழிபாடு ஒன்று வழங்கப்பட்டது பின்னர் ஊடகவியலாளர் லின்ரன் தலைமையில் நிகழ்வு ஆரம்பமானது நிகழ்வில் இறுதிப்போரில் தனது தந்தையையும் மகனையும் இழந்த குடும்பஸ்தர் ஒருவரால் பொது ஈகைச் சுடர் ஏற்றப்பட்டது.  அதனை தொடர்ந்து இறுதிப்போரில் உயிர் நீத்த வீரர்களுக்கும் உறவுகளுக்காகவும்அகவணக்கம் செலுத்தப்பட்டது தொடர்ந்து மலர் அஞ்சலி இடம்பெற்றது. அதனை தொடர்ந்து தமிழின படுகொலையை ஞாபகப்படுத்தும் முகமாக உப்பு கஞ்சி வழங்கப்பபட்டது குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மத குருமார்கள் புலம்பெயர் மக்கள் சிறுவர்கள் இளைஞர்கள் பெண்கள் பொதுமக்கள் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் அகஸ்டின் மற்றும் பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெய கோபி மற்றும் சிரேஸ்ட ஊடகவியலாளர் காண்டீபன் மற்றும் குடத்தனை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ரெஜி என பலரும் கலந்து கொண்டனர்

Advertisement

Advertisement

Advertisement