திருகோணமலை – மடத்தடி சந்தியில் பட்டா ரக வாகனம், மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்துள்ளார்.
இவ் விபத்துச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
மடத்தடி சுற்றுவட்டத்தின் ஊடாக திருஞானசம்பந்தர் வீதிக்கு செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் மீது பிரதான வீதியின் ஊடாக மடத்தடி சந்தியை நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெற்ற இடத்தில் இருந்து சுமார் 15 மீற்றர் தூரம் மோட்டார் சைக்கிள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
குறித்த விபத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
15 மீற்றர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள்; திருமலையில் பட்டா ரக வாகனம் மோதி கோர விபத்து திருகோணமலை – மடத்தடி சந்தியில் பட்டா ரக வாகனம், மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்துள்ளார். இவ் விபத்துச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.மடத்தடி சுற்றுவட்டத்தின் ஊடாக திருஞானசம்பந்தர் வீதிக்கு செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் மீது பிரதான வீதியின் ஊடாக மடத்தடி சந்தியை நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்ற இடத்தில் இருந்து சுமார் 15 மீற்றர் தூரம் மோட்டார் சைக்கிள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.குறித்த விபத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.