சிறிய ரக பட்டா வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை கண்டி பிரதான வீதியின் ஜெயபுர பகுதியில் இன்று (20)இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் வயது (62) ஹிங்குராகொட பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
திருகோணமலையில் இருந்து வந்த பட்டா ரக வாகனத்துடன் திருகோணமலை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து சம்பவத்தில் தொடர்புடைய வாகன சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
பட்டாவுடன் மோதிய மோட்டார்சைக்கிள் - ஸ்தலத்தில் ஒருவர் பலி சிறிய ரக பட்டா வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை கண்டி பிரதான வீதியின் ஜெயபுர பகுதியில் இன்று (20)இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர் வயது (62) ஹிங்குராகொட பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.திருகோணமலையில் இருந்து வந்த பட்டா ரக வாகனத்துடன் திருகோணமலை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.உயிரிழந்தவரின் சடலம் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து சம்பவத்தில் தொடர்புடைய வாகன சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.