பிறந்து 19 நாட்களேயான பச்சிளம் சிசு உதட்டில் பசை ஒட்டியபடி காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா வனப்பகுதியில் இந்தக் கொடூர சம்பவம் பதிவாகியுள்ளது. இது தொடர்பில் தெரியவருகையில்,
ஆண் ஒருவருடன் ஏற்பட்ட தகாத உறவு காரணமாக குறித்த பெண் கர்ப்பம் தரித்தார். இதனால் தனக்கு சமூகத்தில் அவமானம் ஏற்பட்டு விடும் என்பதற்காக குழந்தையின் தாயும் அவரது தந்தையும் பண்டி பகுதியில் தனியாக வீடு ஒன்று வாடகை எடுத்து பிரசவத்தை முடித்துள்ளனர்.
பிரசவம் முடிந்து சிசு பிறந்து 19 ஆவது நாளில் பில்வாரா பகுதியில் உள்ள காட்டில் சிசுவைப் போட்டுள்ளனர்.
அதுமட்டுமன்றி பச்சிளம் சிசு என்பதால் தொடர்ச்சியாக அழுது கொண்டிருக்கும். அழுதால் மற்றவர்களுக்கு சிசு உள்ளது தெரியவந்துவிடும் என்று சிசுவின் வாயில் கை திணிக்கப்பட்டு உதடுகள் பசையால் ஒட்டி காட்டுக்குள் விட்டுள்ளனர்.
குறித்த பகுதிக்கு ஆடு மேய்ப்பவர் சென்றுள்ளார். அதன்போதே உதடுகளில் பசை ஒட்டிய படி இருந்த சிசுவை அவதானித்து அதிர்ச்சியடைந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.
பொலிஸார் விசாரணையில், பிறந்த குழந்தையை முதலில் விற்கவும் முயற்சித்து இருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட தாய்க்கும், சிசுவிற்கும் இடையிலான உறவை உறுதிப்படுத்த டிஎன்ஏ பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட குழந்தை தற்போது கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
அழ முடியாத அளவிற்கு சிசுவிற்கு கொடுமை புரிந்த தாய் மீதும் தாயின் தந்தை மீதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
19 நாட்களான சிசுவை காட்டுக்குள் வீசிய தாய்; அழுகைச் சத்தம் வராமலிருக்க உதட்டில் பசை ஒட்டிய கொடூரம் பிறந்து 19 நாட்களேயான பச்சிளம் சிசு உதட்டில் பசை ஒட்டியபடி காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா வனப்பகுதியில் இந்தக் கொடூர சம்பவம் பதிவாகியுள்ளது. இது தொடர்பில் தெரியவருகையில், ஆண் ஒருவருடன் ஏற்பட்ட தகாத உறவு காரணமாக குறித்த பெண் கர்ப்பம் தரித்தார். இதனால் தனக்கு சமூகத்தில் அவமானம் ஏற்பட்டு விடும் என்பதற்காக குழந்தையின் தாயும் அவரது தந்தையும் பண்டி பகுதியில் தனியாக வீடு ஒன்று வாடகை எடுத்து பிரசவத்தை முடித்துள்ளனர்.பிரசவம் முடிந்து சிசு பிறந்து 19 ஆவது நாளில் பில்வாரா பகுதியில் உள்ள காட்டில் சிசுவைப் போட்டுள்ளனர். அதுமட்டுமன்றி பச்சிளம் சிசு என்பதால் தொடர்ச்சியாக அழுது கொண்டிருக்கும். அழுதால் மற்றவர்களுக்கு சிசு உள்ளது தெரியவந்துவிடும் என்று சிசுவின் வாயில் கை திணிக்கப்பட்டு உதடுகள் பசையால் ஒட்டி காட்டுக்குள் விட்டுள்ளனர். குறித்த பகுதிக்கு ஆடு மேய்ப்பவர் சென்றுள்ளார். அதன்போதே உதடுகளில் பசை ஒட்டிய படி இருந்த சிசுவை அவதானித்து அதிர்ச்சியடைந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கினார். தகவலையடுத்து விரைந்த பொலிஸார் சிசுவை மீட்டனர். அதன்பின்னர் சிசுவின் தாயும், சிசுவின் தாத்தாவும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் விசாரணையில், பிறந்த குழந்தையை முதலில் விற்கவும் முயற்சித்து இருப்பதும் தெரியவந்துள்ளது.இந்நிலையில் கைது செய்யப்பட்ட தாய்க்கும், சிசுவிற்கும் இடையிலான உறவை உறுதிப்படுத்த டிஎன்ஏ பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட குழந்தை தற்போது கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.அழ முடியாத அளவிற்கு சிசுவிற்கு கொடுமை புரிந்த தாய் மீதும் தாயின் தந்தை மீதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.