• Apr 26 2026

ஈரான் மீதான தாக்குதலில் 700க்கு மேற்பட்டோர் உயிரிழப்பு!

Ziya / Mar 3rd 2026, 5:06 pm
image

அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களால் ஈரானுக்கு இதுவரை ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக ஈரான் செஞ்சிலுவை சங்கம் புதுப்பித்துள்ளது. 


இந்த தாக்குதல்களால் 787 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் 176 பேர் சிறுவர்கள் எனவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. 


சமீபத்திய தாக்குதல்களால் நாடு முழுவதும் குறைந்தது 153 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 


இதுவரை அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு இலக்கான மொத்த இடங்களின் எண்ணிக்கை 504 என குறிப்பிடப்பட்டுள்ளது. 


பதிவான தாக்குதல்களின் எண்ணிக்கை 1,039 ஆக அதிகரித்துள்ளது. 


மீட்புப் பணியாளர்கள் தேடுதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும், இடிபாடுகளை அகற்றுதல், காயமடைந்தவர்களை வைத்தியசாலைகளுக்கு மாற்றுதல் மற்றும் மருத்துவ சிகிச்சைகளை வழங்குதல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீதான தாக்குதலில் 700க்கு மேற்பட்டோர் உயிரிழப்பு அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களால் ஈரானுக்கு இதுவரை ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக ஈரான் செஞ்சிலுவை சங்கம் புதுப்பித்துள்ளது. இந்த தாக்குதல்களால் 787 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் 176 பேர் சிறுவர்கள் எனவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. சமீபத்திய தாக்குதல்களால் நாடு முழுவதும் குறைந்தது 153 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு இலக்கான மொத்த இடங்களின் எண்ணிக்கை 504 என குறிப்பிடப்பட்டுள்ளது. பதிவான தாக்குதல்களின் எண்ணிக்கை 1,039 ஆக அதிகரித்துள்ளது. மீட்புப் பணியாளர்கள் தேடுதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும், இடிபாடுகளை அகற்றுதல், காயமடைந்தவர்களை வைத்தியசாலைகளுக்கு மாற்றுதல் மற்றும் மருத்துவ சிகிச்சைகளை வழங்குதல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement