• Mar 08 2026

பரிசில் வந்துள்ளதாக தகவல் அனுப்பி Online Banking மூலம் பண மோசடி!

shanu / Feb 10th 2026, 2:37 pm
image

மஸ்கெலியாவில் ATM CARD DEPOSIT Online Banking அட்டை மூலம் இதுவரையில் ஏழு பேரிடம் பாரிய பண மோசடி இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

கடந்த புதன்கிழமை யிலிருந்து மஸ்கெலியா பிரபல அரச வங்கி வாடிக்கையாளர்கள் சிலருக்கு Dialog or Mobitel இலக்கங்களில் இருந்து உங்களுக்கு டயலாக் இடமிருந்து மிகப் பெறுமதி பரிசுத்தொகை, அப்பள் தொலைபேசி என்பன பரிசாக வந்திருக்கிறது  என அழைப்பு விடுக்கப்பட்டது.  


பின்னர் போலியான BOC இலட்சினைகளைப் பயன்படுத்தி அழைப்பை எடுத்து காசோலைக்கு பதிலாக ATM Card Deposit மூலம் பணம் வைப்பிலிடப்படும் எனவும் தகவல் வழங்கப்பட்டுள்ளது. 


இவ்வாறு BOC மற்றும் போலியான Central Bank அழைப்பு மூலம் வாடிக்கையாளர்களை நம்ப வைத்து ATM அட்டை இலக்கம் Password என்பனவற்றை கேட்டு அதன் பின் குறிப்பிட்ட கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்து மோசடி செய்துள்ளனர். 


இவ்வாறான Online Banking திருட்டு சம்பவங்கள் மஸ்கெலியா பிரதேசத்தில் இன்று வரை 07 பேருக்கு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வங்கி முகாமையாளர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதில் பாதிப்படைந்து வங்கியிலுள்ள வாடிக்கையாளர்கள் பெருமளவு பணத்தையும் இழந்துள்ளனர். 


எனவே வங்கி முகாமையாளர் ரகசிய இலக்கங்களை வேறு ஒருவருக்கு வழங்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.இவ்வாறான போலியான அழைப்புகள் சனி அல்லது ஞாயிறு தினங்களில் தான் இடம் பெறுகின்றன.

பரிசில் வந்துள்ளதாக தகவல் அனுப்பி Online Banking மூலம் பண மோசடி மஸ்கெலியாவில் ATM CARD DEPOSIT Online Banking அட்டை மூலம் இதுவரையில் ஏழு பேரிடம் பாரிய பண மோசடி இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கடந்த புதன்கிழமை யிலிருந்து மஸ்கெலியா பிரபல அரச வங்கி வாடிக்கையாளர்கள் சிலருக்கு Dialog or Mobitel இலக்கங்களில் இருந்து உங்களுக்கு டயலாக் இடமிருந்து மிகப் பெறுமதி பரிசுத்தொகை, அப்பள் தொலைபேசி என்பன பரிசாக வந்திருக்கிறது  என அழைப்பு விடுக்கப்பட்டது.  பின்னர் போலியான BOC இலட்சினைகளைப் பயன்படுத்தி அழைப்பை எடுத்து காசோலைக்கு பதிலாக ATM Card Deposit மூலம் பணம் வைப்பிலிடப்படும் எனவும் தகவல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு BOC மற்றும் போலியான Central Bank அழைப்பு மூலம் வாடிக்கையாளர்களை நம்ப வைத்து ATM அட்டை இலக்கம் Password என்பனவற்றை கேட்டு அதன் பின் குறிப்பிட்ட கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்து மோசடி செய்துள்ளனர். இவ்வாறான Online Banking திருட்டு சம்பவங்கள் மஸ்கெலியா பிரதேசத்தில் இன்று வரை 07 பேருக்கு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வங்கி முகாமையாளர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாதிப்படைந்து வங்கியிலுள்ள வாடிக்கையாளர்கள் பெருமளவு பணத்தையும் இழந்துள்ளனர். எனவே வங்கி முகாமையாளர் ரகசிய இலக்கங்களை வேறு ஒருவருக்கு வழங்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.இவ்வாறான போலியான அழைப்புகள் சனி அல்லது ஞாயிறு தினங்களில் தான் இடம் பெறுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement