• Apr 18 2026

நோர்வூட்டில் நடமாடும் சேவை - பொதுமக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கல்!

Aathira / Apr 1st 2026, 5:31 pm
image

நோர்வூட் பிரதேச செயலாளர் பிரிவின் மேற்பார்வையில் கண்டி கறிஷ்ட செட்டிக் நிறுவனத்துடன் இணைந்து வெளி ஓயா 320.P கிராம உத்தியோகத்தர் பிரிவில் இன்று நடமாடும் சேவை நடவடிக்கைகள் நடைபெற்றன.

இந்த சேவையில் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், திருமண சான்றிதழ் மற்றும் மூத்தோர் அடையாள அட்டைகள் வழங்குவதற்கான முன்னோடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

நோர்வூட் பிரதேச உதவி செயலாளர், தோட்ட அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர் திருமதி வீணா தேவி, கண்டி செட்டிக் நிறுவன அதிகாரி திரு நிக்கோல்ஸ், பிரதேச சபை உறுப்பினர் திருமதி கே. நிஷாந்தினி மற்றும் தோட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த நடமாடும் சேவை மூலம் அப்பகுதியில் உள்ள அனைத்து மக்களும் பயன்பெற்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நோர்வூட்டில் நடமாடும் சேவை - பொதுமக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கல் நோர்வூட் பிரதேச செயலாளர் பிரிவின் மேற்பார்வையில் கண்டி கறிஷ்ட செட்டிக் நிறுவனத்துடன் இணைந்து வெளி ஓயா 320.P கிராம உத்தியோகத்தர் பிரிவில் இன்று நடமாடும் சேவை நடவடிக்கைகள் நடைபெற்றன.இந்த சேவையில் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், திருமண சான்றிதழ் மற்றும் மூத்தோர் அடையாள அட்டைகள் வழங்குவதற்கான முன்னோடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.நோர்வூட் பிரதேச உதவி செயலாளர், தோட்ட அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர் திருமதி வீணா தேவி, கண்டி செட்டிக் நிறுவன அதிகாரி திரு நிக்கோல்ஸ், பிரதேச சபை உறுப்பினர் திருமதி கே. நிஷாந்தினி மற்றும் தோட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.இந்த நடமாடும் சேவை மூலம் அப்பகுதியில் உள்ள அனைத்து மக்களும் பயன்பெற்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement