வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க, கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி ஆகியோர் உடன் பதவி விலக வேண்டும். பொறுப்புக்களை புறக்கோட்டை வர்த்தகர்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உப்பு பிரச்சினை பற்றி பேசும்போது ஆளும் தரப்பால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அரசாங்கத்தின் பலவீனத்தை சுட்டிக்காட்டும் போது அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இவர்களுக்கு கிடையாது.
எதிர்க்கட்சியின் உறுப்பினர் அர்ச்சுனா எழுப்பிய கேள்விகளுக்கு கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி முறையாக பதிலளிக்கவில்லை. மாறாக பாதாள குழுவை போன்று பேசுகிறார்.
அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி சபைக்கு பொருந்தாத வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.
அரிசி, மா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தேவையில்லை, புறக்கோட்டை வர்த்தகர்கள் அவற்றை இறக்குமதி செய்வார்கள்.
ஆகவே பொறுப்பான அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்றார்.
அமைச்சர்களான ஹந்துன்நெத்தி, சமரசிங்க உடன் பதவி விலக வேண்டும் - சபையில் சீறிய சமிந்த விஜேசிறி வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க, கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி ஆகியோர் உடன் பதவி விலக வேண்டும். பொறுப்புக்களை புறக்கோட்டை வர்த்தகர்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.உப்பு பிரச்சினை பற்றி பேசும்போது ஆளும் தரப்பால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அரசாங்கத்தின் பலவீனத்தை சுட்டிக்காட்டும் போது அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இவர்களுக்கு கிடையாது. எதிர்க்கட்சியின் உறுப்பினர் அர்ச்சுனா எழுப்பிய கேள்விகளுக்கு கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி முறையாக பதிலளிக்கவில்லை. மாறாக பாதாள குழுவை போன்று பேசுகிறார்.அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி சபைக்கு பொருந்தாத வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். அரிசி, மா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தேவையில்லை, புறக்கோட்டை வர்த்தகர்கள் அவற்றை இறக்குமதி செய்வார்கள். ஆகவே பொறுப்பான அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்றார்.