• Apr 15 2026

வலுசக்தி அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்: எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு - பதிலடி கொடுத்த அமைச்சர் நளிந்த

Chithra / Apr 10th 2026, 3:52 pm
image

மக்கள் ஆணையை மதிப்பதாக இருந்தால் வலுசக்தி அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும், அவருக்காக அரசாங்கம் முன்னின்று வாதிடக்கூடாது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.


வலுசக்தி அமைச்சருக்கு எதிராக இன்று (10) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


இந்த நாட்டின் மக்கள் ஆணையை மதிப்பதாக இருந்தால், இந்த அரசாங்கத்தில் உள்ள 159 உறுப்பினர்களும் இந்த மோசடிக்காக முன்நிற்க முடியாது.


விலைமனு வழங்கப்பட்ட விதம் தவறானது என்று கணக்காய்வாளர் அறிக்கையிலேயே கூறப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட விலைமனு மற்றும் அது தொடர்பான விடயங்கள் அனைத்தும் தவறானவை என அவர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை இலங்கையின் நிலக்கரி கொள்வனவு நடைமுறைகளில் பாரிய முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.


இந்த மோசடிகள் காரணமாக நாட்டுக்கு சுமார் 30 பில்லியன் ரூபாவிற்கும் அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இது நாட்டின் வரலாற்றில் இடம்பெற்ற ஒரு மிகப்பாரிய திட்டமிட்ட கொள்ளை என அவர் விமர்சித்தார்.


விநியோகஸ்தர்கள் முறையாகப் பதிவு செய்யப்படுவதற்கு முன்னரே அவர்களுக்கு ஏல ஆவணங்கள் (Bidding Documents) வழங்கப்பட்டுள்ளன.கணக்காய்வாளர் நாயகத்தின் ஆலோசனைகளை மீறி, 42 நாட்களாக இருந்த விலைமனுக் காலம் 21 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.


குறிப்பிட்ட சில ஊழல் நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயற்படும் வகையில், நிலக்கரியின் கலோரி அளவு (Kilocalories) வேண்டுமென்றே திருத்தப்பட்டுள்ளது. அத்துடன், சட்டமா அதிபரின் இறுதி இணக்கம் கிடைப்பதற்கு முன்னரே இந்த விலைமனுக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.


இந்நிலையில்   

இலங்கையின் நிலக்கரி கொள்வனவு தொடர்பில் எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலக்கரி விநியோகிக்கும் செயல்முறை தற்போதைய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டது அல்ல என்றும், இது கடந்த 15 வருடங்களாகத் தொடர்ந்து இடம்பெற்று வரும் ஒரு நடைமுறை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


நிலக்கரியின் தரம் குறைவாகக் காணப்பட்ட சந்தர்ப்பங்களில், விநியோகஸ்தர்களிடமிருந்து பாரிய தொகை அபராதமாக அறவிடப்பட்டுள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார்.


முதலாவது கப்பலுக்கு 2.07 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதமும் இரண்டாவது கப்பலுக்கு 436,000 அமெரிக்க டொலர் அபராதமும் ஏனைய கப்பல்களுக்கும் முறையான வரிசைப்படி அபராதங்கள் அறவிடப்பட்டுள்ளன.


நிலக்கரி இறக்குமதியின் போது ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் நிதி இழப்புகள் குறித்து ஆராய்வதற்காக மொறட்டுவை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களைக் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.


தற்போதைய கொள்முதல் செயல்முறைகள் அனைத்தும் சட்டபூர்வமாகவும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்த அவர், எவ்வித ஊழல்களுக்கும் இடமளிக்கப் போவதில்லை எனவும் உறுதியளித்தார்.


வலுசக்தி அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்: எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு - பதிலடி கொடுத்த அமைச்சர் நளிந்த மக்கள் ஆணையை மதிப்பதாக இருந்தால் வலுசக்தி அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும், அவருக்காக அரசாங்கம் முன்னின்று வாதிடக்கூடாது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.வலுசக்தி அமைச்சருக்கு எதிராக இன்று (10) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.இந்த நாட்டின் மக்கள் ஆணையை மதிப்பதாக இருந்தால், இந்த அரசாங்கத்தில் உள்ள 159 உறுப்பினர்களும் இந்த மோசடிக்காக முன்நிற்க முடியாது.விலைமனு வழங்கப்பட்ட விதம் தவறானது என்று கணக்காய்வாளர் அறிக்கையிலேயே கூறப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட விலைமனு மற்றும் அது தொடர்பான விடயங்கள் அனைத்தும் தவறானவை என அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை இலங்கையின் நிலக்கரி கொள்வனவு நடைமுறைகளில் பாரிய முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.இந்த மோசடிகள் காரணமாக நாட்டுக்கு சுமார் 30 பில்லியன் ரூபாவிற்கும் அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இது நாட்டின் வரலாற்றில் இடம்பெற்ற ஒரு மிகப்பாரிய திட்டமிட்ட கொள்ளை என அவர் விமர்சித்தார்.விநியோகஸ்தர்கள் முறையாகப் பதிவு செய்யப்படுவதற்கு முன்னரே அவர்களுக்கு ஏல ஆவணங்கள் (Bidding Documents) வழங்கப்பட்டுள்ளன.கணக்காய்வாளர் நாயகத்தின் ஆலோசனைகளை மீறி, 42 நாட்களாக இருந்த விலைமனுக் காலம் 21 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.குறிப்பிட்ட சில ஊழல் நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயற்படும் வகையில், நிலக்கரியின் கலோரி அளவு (Kilocalories) வேண்டுமென்றே திருத்தப்பட்டுள்ளது. அத்துடன், சட்டமா அதிபரின் இறுதி இணக்கம் கிடைப்பதற்கு முன்னரே இந்த விலைமனுக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.இந்நிலையில்   இலங்கையின் நிலக்கரி கொள்வனவு தொடர்பில் எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலக்கரி விநியோகிக்கும் செயல்முறை தற்போதைய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டது அல்ல என்றும், இது கடந்த 15 வருடங்களாகத் தொடர்ந்து இடம்பெற்று வரும் ஒரு நடைமுறை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.நிலக்கரியின் தரம் குறைவாகக் காணப்பட்ட சந்தர்ப்பங்களில், விநியோகஸ்தர்களிடமிருந்து பாரிய தொகை அபராதமாக அறவிடப்பட்டுள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார்.முதலாவது கப்பலுக்கு 2.07 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதமும் இரண்டாவது கப்பலுக்கு 436,000 அமெரிக்க டொலர் அபராதமும் ஏனைய கப்பல்களுக்கும் முறையான வரிசைப்படி அபராதங்கள் அறவிடப்பட்டுள்ளன.நிலக்கரி இறக்குமதியின் போது ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் நிதி இழப்புகள் குறித்து ஆராய்வதற்காக மொறட்டுவை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களைக் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.தற்போதைய கொள்முதல் செயல்முறைகள் அனைத்தும் சட்டபூர்வமாகவும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்த அவர், எவ்வித ஊழல்களுக்கும் இடமளிக்கப் போவதில்லை எனவும் உறுதியளித்தார்.

Advertisement

Advertisement

Advertisement