மட்டக்களப்பு -கொழும்புக்கான பொதுபோக்குவரத்துச்சேவையொன்றை மேற்கொள்வதற்காக மட்டக்களப்பு மாநகரசபையினால் போக்குவரத்து அமைச்சர் சுனில் ஹெந்துநெத்தியிடம் விடுக்கப்பட்ட வழிப்போக்குவரத்திற்கான அனுமதியை அமைச்சர் எழுத்துமூலம் வழங்கியுள்ளதாகவும் அதற்காக அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கியநாதன் இன்றைய தினம் மாநகரசபைக்கு அறிவித்தார்.
மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது.
மாநகரசபையின் சம்பிரதாயங்களுக்கு அமைவாக சபை நடவடிக்கைகள் ஆரம்பமான நிலையில் இன்றைய சபை அமர்வில் பிரதி முதல்வர் மு.தினேஸ்குமார்,ஆணையாளர் என்.தனஞ்செயன், கணக்காளர்,மாநகரசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரினால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டதை தொடர்ந்து கடந்தகால கூட்டறிக்கை வாசிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட திட்ட முன்மொழிவுகள் மற்றும் மாநகரசபையின் அனுமதியைப்பெறுவதற்கான கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
இன்றைய சபை அமர்வின்போது மாநகரசபையில் நடைபெற்ற நிதிக்கொடுக்கல்வாங்கல்குறித்து சபையில் பல்வேறு கருத்துகள் முன்வைக்க்பபட்டதுடன் சபையின் நடைமுறைகளையும் மாநகரசபையின் நடைமுறைகளையும் மீறிய வகையில் கொடுக்கல்வாங்கல் நடைபெற்றதாக பல்வேறு உறுப்பினர்களினாலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இது தொடர்பில் சபை நிறுத்தப்பட்டு கணக்காளரின்; கருத்துகள் பெறப்பட்ட நிலையில் மீண்டும் சபை நடவடிக்கைகள் ஆரம்பமான நிலையில் பல்வேறு கருத்துகளும் இதன்போது முன்வைக்கப்பட்டன.
இதேபோன்று மட்டக்களப்பு மாநகரசபைக்கு வருமானம் ஈடுட்டும் வகையிலும் மக்களின் நன்மை கருதியும் மட்டக்களப்பு-கொழுப்புக்கான போக்குவரத்துச்சேவையொன்றை நடாத்துவதற்கு வழிஅனுமதியை கடந்த ஆண்டு மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரினால் அமைச்சர் சுனில் ஹெந்துநித்தியுடம் வேண்டுகோள் ஒன்று முன்வைக்கப்பட்டதாகவும் அந்தவேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான அனுமதி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளதாக இங்கு மாநகர முதல்வரினால் அறிவிக்கப்பட்டது.அதற்கு மாநகரசபை முதல்வரினால் அமைச்சருக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
இதேபோன்று பல்வேறுவாதப்பிரதிவாதங்கள் நடைபெற்ற நிலையில் இன்றைய தினம் சபை நடவடிக்கைகள் முடிவுக்குவந்தன.
மட்டக்களப்பு - கொழும்பு ரயில் போக்குவரத்து சேவைக்கு அமைச்சரிடம் அனுமதி மட்டக்களப்பு -கொழும்புக்கான பொதுபோக்குவரத்துச்சேவையொன்றை மேற்கொள்வதற்காக மட்டக்களப்பு மாநகரசபையினால் போக்குவரத்து அமைச்சர் சுனில் ஹெந்துநெத்தியிடம் விடுக்கப்பட்ட வழிப்போக்குவரத்திற்கான அனுமதியை அமைச்சர் எழுத்துமூலம் வழங்கியுள்ளதாகவும் அதற்காக அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கியநாதன் இன்றைய தினம் மாநகரசபைக்கு அறிவித்தார்.மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது.மாநகரசபையின் சம்பிரதாயங்களுக்கு அமைவாக சபை நடவடிக்கைகள் ஆரம்பமான நிலையில் இன்றைய சபை அமர்வில் பிரதி முதல்வர் மு.தினேஸ்குமார்,ஆணையாளர் என்.தனஞ்செயன், கணக்காளர்,மாநகரசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.இதன்போது மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரினால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டதை தொடர்ந்து கடந்தகால கூட்டறிக்கை வாசிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.அதனை தொடர்ந்து எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட திட்ட முன்மொழிவுகள் மற்றும் மாநகரசபையின் அனுமதியைப்பெறுவதற்கான கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.இன்றைய சபை அமர்வின்போது மாநகரசபையில் நடைபெற்ற நிதிக்கொடுக்கல்வாங்கல்குறித்து சபையில் பல்வேறு கருத்துகள் முன்வைக்க்பபட்டதுடன் சபையின் நடைமுறைகளையும் மாநகரசபையின் நடைமுறைகளையும் மீறிய வகையில் கொடுக்கல்வாங்கல் நடைபெற்றதாக பல்வேறு உறுப்பினர்களினாலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.இது தொடர்பில் சபை நிறுத்தப்பட்டு கணக்காளரின்; கருத்துகள் பெறப்பட்ட நிலையில் மீண்டும் சபை நடவடிக்கைகள் ஆரம்பமான நிலையில் பல்வேறு கருத்துகளும் இதன்போது முன்வைக்கப்பட்டன.இதேபோன்று மட்டக்களப்பு மாநகரசபைக்கு வருமானம் ஈடுட்டும் வகையிலும் மக்களின் நன்மை கருதியும் மட்டக்களப்பு-கொழுப்புக்கான போக்குவரத்துச்சேவையொன்றை நடாத்துவதற்கு வழிஅனுமதியை கடந்த ஆண்டு மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரினால் அமைச்சர் சுனில் ஹெந்துநித்தியுடம் வேண்டுகோள் ஒன்று முன்வைக்கப்பட்டதாகவும் அந்தவேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான அனுமதி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளதாக இங்கு மாநகர முதல்வரினால் அறிவிக்கப்பட்டது.அதற்கு மாநகரசபை முதல்வரினால் அமைச்சருக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது.இதேபோன்று பல்வேறுவாதப்பிரதிவாதங்கள் நடைபெற்ற நிலையில் இன்றைய தினம் சபை நடவடிக்கைகள் முடிவுக்குவந்தன.