• Feb 01 2026

முல்லைத்தீவு வெலிஓயாவில் மில்கோவின் 97வது குளிர்பதன சேமிப்பு நிலையம்!

shanuja / Jan 31st 2026, 2:38 pm
image

இலங்கையில் திரவ பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் மில்கோ நிறுவனம் அமைத்துள்ள புதிய குளிர்பதன சேமிப்பு நிலையத்தின் திறப்பு விழா இன்றையதினம் (31.01.2026) முல்லைத்தீவு வெலிஓயா பகுதியில்  கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவின் தலைமையில் நடைபெற்றது.


6 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இக்குளிர்பதன சேமிப்பு நிலையம், மில்கோ நிறுவனத்தின் 97வது குளிர்பதன நிலையமாக அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையம் பண்ணையாளர்களிடமிருந்து பெறப்படும் 5,000 லீற்றர் பாலை ஒரே நேரத்தில் சேமிக்கும் திறன் கொண்டதாக அமைந்துள்ளது.


இந்த திட்டத்துடன் இணையாக, மில்கோ நிறுவனத்திற்கு திரவ பால் வழங்கிய 16 விவசாயிகளுக்கு 1.2 மில்லியன் ரூபா மதிப்பிலான ஊக்கத்தொகை காசோலைகளும், பால் சேகரிப்பு கொள்கலன்களும் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க அவர்களால் வழங்கி வைக்கப்பட்டன.


இந்நிகழ்வில் மில்கோ நிறுவனத்தின் துணைத் தலைவர் புஷ்பகுமார கமகே, வடக்கு மாகாண மேலாளர் சம்பத் ஜெயசேகர, மில்கோ நிறுவன அதிகாரிகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அப்பகுதியை சேர்ந்த பால் பண்ணையாளர்கள் மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.


இந்த குளிர்பதன சேமிப்பு நிலையத்தின் மூலம் வடக்கு மாகாணத்தில் திரவ பால் உற்பத்தி மேலும் ஊக்குவிக்கப்படுவதுடன், விவசாயிகளுக்கான வருமானமும் உறுதியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


முல்லைத்தீவு வெலிஓயாவில் மில்கோவின் 97வது குளிர்பதன சேமிப்பு நிலையம் இலங்கையில் திரவ பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் மில்கோ நிறுவனம் அமைத்துள்ள புதிய குளிர்பதன சேமிப்பு நிலையத்தின் திறப்பு விழா இன்றையதினம் (31.01.2026) முல்லைத்தீவு வெலிஓயா பகுதியில்  கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவின் தலைமையில் நடைபெற்றது.6 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இக்குளிர்பதன சேமிப்பு நிலையம், மில்கோ நிறுவனத்தின் 97வது குளிர்பதன நிலையமாக அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையம் பண்ணையாளர்களிடமிருந்து பெறப்படும் 5,000 லீற்றர் பாலை ஒரே நேரத்தில் சேமிக்கும் திறன் கொண்டதாக அமைந்துள்ளது.இந்த திட்டத்துடன் இணையாக, மில்கோ நிறுவனத்திற்கு திரவ பால் வழங்கிய 16 விவசாயிகளுக்கு 1.2 மில்லியன் ரூபா மதிப்பிலான ஊக்கத்தொகை காசோலைகளும், பால் சேகரிப்பு கொள்கலன்களும் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க அவர்களால் வழங்கி வைக்கப்பட்டன.இந்நிகழ்வில் மில்கோ நிறுவனத்தின் துணைத் தலைவர் புஷ்பகுமார கமகே, வடக்கு மாகாண மேலாளர் சம்பத் ஜெயசேகர, மில்கோ நிறுவன அதிகாரிகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அப்பகுதியை சேர்ந்த பால் பண்ணையாளர்கள் மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.இந்த குளிர்பதன சேமிப்பு நிலையத்தின் மூலம் வடக்கு மாகாணத்தில் திரவ பால் உற்பத்தி மேலும் ஊக்குவிக்கப்படுவதுடன், விவசாயிகளுக்கான வருமானமும் உறுதியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement