• Apr 19 2026

மத்திய கிழக்கு போர் பதற்றம்; இலங்கைக்கு வரும் விமான சேவைகள் தொடர்ந்தும் தாமதம்

Chithra / Mar 17th 2026, 9:48 am
image


மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இலங்கைக்கு வரும் விமானச் சேவைகள் தொடர்ந்து தாமதங்களை எதிர்நோக்கி வருவதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.


நேற்று சுமார் நான்கு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தமிந்த ரம்புவெல்ல தெரிவித்தார்.


வான்பரப்பு மூடப்பட்டமை மற்றும் மத்திய கிழக்கின் போர் பதற்றம் காரணமாக பெரும்பாலான வெளிநாட்டு விமான நிறுவனங்கள் தமது திட்டமிடப்பட்ட விமான சேவைகளை இரத்து செய்துள்ளன.


நேற்றைய தினம் ஒரு சில விமானங்கள் மட்டுமே சேவையில் ஈடுபட்டன. அவற்றில் முக்கியமானவை,  சலாம் ஏர் (SalamAir), எதிஹாட் ஏர்வேஸ் (Etihad Airways) , ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) என்பனவாகும்.


மத்திய கிழக்கின் பல விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாலும், வான்பரப்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாலும் பெரும்பாலான சர்வதேச விமான நிறுவனங்கள் தமது சேவைகளை நிறுத்தியுள்ளன. 

மத்திய கிழக்கு போர் பதற்றம்; இலங்கைக்கு வரும் விமான சேவைகள் தொடர்ந்தும் தாமதம் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இலங்கைக்கு வரும் விமானச் சேவைகள் தொடர்ந்து தாமதங்களை எதிர்நோக்கி வருவதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.நேற்று சுமார் நான்கு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தமிந்த ரம்புவெல்ல தெரிவித்தார்.வான்பரப்பு மூடப்பட்டமை மற்றும் மத்திய கிழக்கின் போர் பதற்றம் காரணமாக பெரும்பாலான வெளிநாட்டு விமான நிறுவனங்கள் தமது திட்டமிடப்பட்ட விமான சேவைகளை இரத்து செய்துள்ளன.நேற்றைய தினம் ஒரு சில விமானங்கள் மட்டுமே சேவையில் ஈடுபட்டன. அவற்றில் முக்கியமானவை,  சலாம் ஏர் (SalamAir), எதிஹாட் ஏர்வேஸ் (Etihad Airways) , ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) என்பனவாகும்.மத்திய கிழக்கின் பல விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாலும், வான்பரப்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாலும் பெரும்பாலான சர்வதேச விமான நிறுவனங்கள் தமது சேவைகளை நிறுத்தியுள்ளன. 

Advertisement

Advertisement

Advertisement