• May 25 2026

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடமாடும் மருத்துவக் குழுக்கள்!

Chithra / Dec 5th 2025, 12:52 pm
image

பேரிடர் காரணமாக இடம்பெயர்ந்த அல்லது கிராமங்களில் சிக்கித் தவிக்கும் மக்களின் சுகாதார நிலைமையை ஆராய்வதற்கு நடமாடும் வைத்தியக் குழுக்கள் நிறுவப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொற்று நோயற்ற நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த குழுக்கள் தேவையான மருந்துகளையும் வழங்கவுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் பேராசிரியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களுக்காக வைத்திய சேவைகளை வழங்குவதற்கு தானாக முன்வரும் வைத்தியர்கள் உள்ளிட்ட குழுக்கள் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு பொருத்தமான இடத்தைப் பெற மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என்று பிரதி அமைச்சர்  வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில் எலிக்காய்ச்சலைக்  கட்டுப்படுத்துவதற்கு  தேவையான மருந்துகள் ஒவ்வொரு பொதுச் சுகாதார உத்தியோகத்தரிடம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி மேலும் தெரிவித்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் பேரிடர் காரணமாக இடம்பெயர்ந்த அல்லது கிராமங்களில் சிக்கித் தவிக்கும் மக்களின் சுகாதார நிலைமையை ஆராய்வதற்கு நடமாடும் வைத்தியக் குழுக்கள் நிறுவப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.தொற்று நோயற்ற நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த குழுக்கள் தேவையான மருந்துகளையும் வழங்கவுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் பேராசிரியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்.இடம்பெயர்ந்த மக்களுக்காக வைத்திய சேவைகளை வழங்குவதற்கு தானாக முன்வரும் வைத்தியர்கள் உள்ளிட்ட குழுக்கள் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு பொருத்தமான இடத்தைப் பெற மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என்று பிரதி அமைச்சர்  வலியுறுத்தியுள்ளார்.இதற்கிடையில் எலிக்காய்ச்சலைக்  கட்டுப்படுத்துவதற்கு  தேவையான மருந்துகள் ஒவ்வொரு பொதுச் சுகாதார உத்தியோகத்தரிடம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement