• May 22 2026

323 கொள்கலன்கள் விவகாரம்: விசாரணைக்கு நாடாளுமன்ற தெரிவுக் குழு நியமிக்க கோரிக்கை

Chithra / Oct 8th 2025, 10:36 am
image


கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரிக்க, விசேட நாடாளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்க கோரி, ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி சபாநாயகரிடம் பிரேரணையொன்றை கையளித்தது.

முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் "சிவப்பு லேபள்" (Red Label) ஒட்டப்பட்டிருந்த இந்தக் கொள்கலன்களை விடுவித்தது தொடர்பாக ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் திறைசேரிச் செயலாளரால் ஏற்கனவே விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அந்த விசாரணைக் குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய்ந்து எதிர்க்கட்சி தமது அவதானிப்புகளை முன்வைத்துள்ளது.

அதன்படி, கொள்கலன்களை விடுவித்த முறை சட்டத்திற்கு முரணானது எனவும்,சரியான பரிசோதனை இன்றி கொள்கலன்களை விடுவித்தமை தேசிய பாதுகாப்பு, வருமான சேகரிப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு ஆகியவற்றுக்குப் பாரதூரமான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி தமது அவதானிப்பை முன்வைத்தது.

இதன்மூலம் போதைப்பொருள், ஆயுதங்கள் அல்லது பிற தடைசெய்யப்பட்ட பொருட்கள் விடுவிக்கப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளமையினால்இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததொரு பிரச்சினை என்பதால், இது குறித்து ஆழமாக ஆராய விசேட நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்றை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்தப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கயந்த கருணாதிலக்க, ரஞ்சித் மத்தும பண்டார, டி.வி. சானக்க, ஜே.சி. அலவத்துவல, கவிந்த ஜயவர்தன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

323 கொள்கலன்கள் விவகாரம்: விசாரணைக்கு நாடாளுமன்ற தெரிவுக் குழு நியமிக்க கோரிக்கை கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரிக்க, விசேட நாடாளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்க கோரி, ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி சபாநாயகரிடம் பிரேரணையொன்றை கையளித்தது.முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் "சிவப்பு லேபள்" (Red Label) ஒட்டப்பட்டிருந்த இந்தக் கொள்கலன்களை விடுவித்தது தொடர்பாக ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் திறைசேரிச் செயலாளரால் ஏற்கனவே விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டது.அந்த விசாரணைக் குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய்ந்து எதிர்க்கட்சி தமது அவதானிப்புகளை முன்வைத்துள்ளது.அதன்படி, கொள்கலன்களை விடுவித்த முறை சட்டத்திற்கு முரணானது எனவும்,சரியான பரிசோதனை இன்றி கொள்கலன்களை விடுவித்தமை தேசிய பாதுகாப்பு, வருமான சேகரிப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு ஆகியவற்றுக்குப் பாரதூரமான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி தமது அவதானிப்பை முன்வைத்தது.இதன்மூலம் போதைப்பொருள், ஆயுதங்கள் அல்லது பிற தடைசெய்யப்பட்ட பொருட்கள் விடுவிக்கப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளமையினால்இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததொரு பிரச்சினை என்பதால், இது குறித்து ஆழமாக ஆராய விசேட நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்றை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது.இந்தப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கயந்த கருணாதிலக்க, ரஞ்சித் மத்தும பண்டார, டி.வி. சானக்க, ஜே.சி. அலவத்துவல, கவிந்த ஜயவர்தன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement