• Apr 15 2026

வடமராட்சியில் மாபெரும் சுனாமி ஒத்திகை நிகழ்வு

Chithra / Nov 5th 2025, 10:56 am
image

உலக சுனாமி பேரிடர் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, இந்தியப் பெருங்கடல் சுனாமி ஒத்திகை பயிற்சி இன்று (05) நடைபெறுகிறது. 

யுனெஸ்கோவின் மாநிலங்களுக்கு இடையேயான கடலியல் ஆணைக்குழுவின் சுனாமி எச்சரிக்கை மற்றும் தணிப்பு அமைப்பு மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட பிராந்தியப் பயிற்சியாக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சியை இலங்கையின் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் உறுதி செய்துள்ளது. 

இந்தத் திட்டத்திற்காக, இலங்கையின் கடலோர மாவட்டங்களான மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கிராம அலுவலர் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. 

அதன்படி சுனாமி ஒத்திகை பயிற்சி இன்று பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் பாடசாலையில் இடம்பெற்று வருகின்றது. 

காலை 9:15 மணியளவில் சுனாமி எச்சரிக்கை ஒலி ஒலிக்கப்பட்டதை தொடர்ந்து மாணவிகள் வகுப்பு வகுப்பாக அணிவகுக்கப்பட்டு, அங்கு உரியவர்கள் அறுவுறுத்தப்பட்டனர். 

வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் இடைத்தங்கல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அங்கு மருத்துவ வசதிகள், உணவு, உட்பட பல்வேறு வசதிகளும்  செய்யப்பட்டிருந்தன.

பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ குழுவினரால் பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே வட இந்து மகளிர் கல்லூரியில் மாணவர்கள், கிராம மக்கள் தங்க வைக்கப்பட்டனர்.

இதேவேளை ஒத்திகையின்போது பாதுகாப்பாக நகர்ந்த மக்கள், மணவர்களில் ஒரு சிலரிற்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன. 

காயமடைந்தவர்களை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், சென்ஜோன்ஸ் ஆம்புலன்ஸ் பருத்தித்துறை பொலிசார் ஆகியோர் ஏற்றிவந்து வட இந்து மகளிர் கல்லூரியல் ஏற்பாடு செய்யப்பட்ட முதலுதவி சிகிச்சை நிலையத்தில் சிகிச்சையளிக்கப்பட்டனர்.

இவ் ஒத்திகை நிகழ்வில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம்,  இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், சென்ஜோன்ஸ் ஆம்புலன்ஸ் படைப்பிரிவு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை,  பருத்தித்துறை போலீசார், கடற்படை, இராணுவம், சிறப்பு அதிரடி படை, பருத்தித்துறை மகரசபை தவிசாளர் மற்றும் உப தவிசாளர், கியூமெடிக்கா உட்பட பல்வேறு அமைப்புக்கள் திணைக்களங்கள் பங்குபற்றியிருந்தன.

இச் சுனாமி ஒத்திகை நிகழ்வில் சுமார் 500க்கும் மேற்பட்ட வடமராட்சி மெதடிஸ்த பெண்களட கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் சுமார் 250 பேர் வரையும் கலந்துகொண்டுருந்தனர்.


வடமராட்சியில் மாபெரும் சுனாமி ஒத்திகை நிகழ்வு உலக சுனாமி பேரிடர் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, இந்தியப் பெருங்கடல் சுனாமி ஒத்திகை பயிற்சி இன்று (05) நடைபெறுகிறது. யுனெஸ்கோவின் மாநிலங்களுக்கு இடையேயான கடலியல் ஆணைக்குழுவின் சுனாமி எச்சரிக்கை மற்றும் தணிப்பு அமைப்பு மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட பிராந்தியப் பயிற்சியாக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்தப் பயிற்சியை இலங்கையின் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் உறுதி செய்துள்ளது. இந்தத் திட்டத்திற்காக, இலங்கையின் கடலோர மாவட்டங்களான மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கிராம அலுவலர் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி சுனாமி ஒத்திகை பயிற்சி இன்று பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் பாடசாலையில் இடம்பெற்று வருகின்றது. காலை 9:15 மணியளவில் சுனாமி எச்சரிக்கை ஒலி ஒலிக்கப்பட்டதை தொடர்ந்து மாணவிகள் வகுப்பு வகுப்பாக அணிவகுக்கப்பட்டு, அங்கு உரியவர்கள் அறுவுறுத்தப்பட்டனர். வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் இடைத்தங்கல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அங்கு மருத்துவ வசதிகள், உணவு, உட்பட பல்வேறு வசதிகளும்  செய்யப்பட்டிருந்தன.பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ குழுவினரால் பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே வட இந்து மகளிர் கல்லூரியில் மாணவர்கள், கிராம மக்கள் தங்க வைக்கப்பட்டனர்.இதேவேளை ஒத்திகையின்போது பாதுகாப்பாக நகர்ந்த மக்கள், மணவர்களில் ஒரு சிலரிற்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன. காயமடைந்தவர்களை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், சென்ஜோன்ஸ் ஆம்புலன்ஸ் பருத்தித்துறை பொலிசார் ஆகியோர் ஏற்றிவந்து வட இந்து மகளிர் கல்லூரியல் ஏற்பாடு செய்யப்பட்ட முதலுதவி சிகிச்சை நிலையத்தில் சிகிச்சையளிக்கப்பட்டனர்.இவ் ஒத்திகை நிகழ்வில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம்,  இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், சென்ஜோன்ஸ் ஆம்புலன்ஸ் படைப்பிரிவு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை,  பருத்தித்துறை போலீசார், கடற்படை, இராணுவம், சிறப்பு அதிரடி படை, பருத்தித்துறை மகரசபை தவிசாளர் மற்றும் உப தவிசாளர், கியூமெடிக்கா உட்பட பல்வேறு அமைப்புக்கள் திணைக்களங்கள் பங்குபற்றியிருந்தன.இச் சுனாமி ஒத்திகை நிகழ்வில் சுமார் 500க்கும் மேற்பட்ட வடமராட்சி மெதடிஸ்த பெண்களட கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் சுமார் 250 பேர் வரையும் கலந்துகொண்டுருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement