• Jul 21 2025

நானுஓயா உடரெதல்ல தோட்ட குடியிருப்பு பகுதியில் ஆணின் சடலம் மீட்பு!

Thansita / Jul 20th 2025, 5:20 pm
image

நுவரெலியா நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட   உடரெதல்ல தோட்ட குடியிருப்பு பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலத்தை இன்று பொலிஸார் மீட்டுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் எஸ் வடிவேல் 60 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் என தெரியவருகிறது.

இறந்த நிலையில் சடலம் இருப்பதை கண்ட பிரதேச மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டது.

சடலம்   பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


நானுஓயா உடரெதல்ல தோட்ட குடியிருப்பு பகுதியில் ஆணின் சடலம் மீட்பு நுவரெலியா நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட   உடரெதல்ல தோட்ட குடியிருப்பு பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலத்தை இன்று பொலிஸார் மீட்டுள்ளனர்.இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் எஸ் வடிவேல் 60 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் என தெரியவருகிறது.இறந்த நிலையில் சடலம் இருப்பதை கண்ட பிரதேச மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டது.சடலம்   பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement