• Aug 18 2026

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் பொது முகாமையாளருக்கு கட்டாய விடுமுறை

Chithra / Aug 18th 2026, 10:44 am
image


தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் பொது முகாமையாளரைக் கட்டாய விடுமுறையில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


இது குறித்து அந்த அதிகாரசபையின் தலைவர் ஜே.கே.ஏ. சிறிநாத எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


சம்பளத்துடனான இந்த கட்டாய விடுமுறைக் காலத்தில், அதிகாரசபையின் அலுவலகம் அல்லது பணித்தளங்களுக்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், தலைவரின் அனுமதியின்றி வெளிநாடு செல்லக் கூடாது என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


பொது முகாமையாளர் நிறுவனக் கோவை மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் ஒழுக்க நெறிமுறைகளை மீறி பல கடுமையான துஷ்பிரயோகங்களைச் செய்துள்ளமை முதற்கட்டமாக வெளிப்பட்டுள்ளமையே இத்தீர்மானத்திற்குக் காரணம் என மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் நாட்டின் நடைமுறையிலுள்ள சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ஜே.கே.ஏ. சிறிநாத தெரிவித்தார்.


தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் பொது முகாமையாளருக்கு கட்டாய விடுமுறை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் பொது முகாமையாளரைக் கட்டாய விடுமுறையில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த அதிகாரசபையின் தலைவர் ஜே.கே.ஏ. சிறிநாத எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பளத்துடனான இந்த கட்டாய விடுமுறைக் காலத்தில், அதிகாரசபையின் அலுவலகம் அல்லது பணித்தளங்களுக்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், தலைவரின் அனுமதியின்றி வெளிநாடு செல்லக் கூடாது என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொது முகாமையாளர் நிறுவனக் கோவை மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் ஒழுக்க நெறிமுறைகளை மீறி பல கடுமையான துஷ்பிரயோகங்களைச் செய்துள்ளமை முதற்கட்டமாக வெளிப்பட்டுள்ளமையே இத்தீர்மானத்திற்குக் காரணம் என மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் நாட்டின் நடைமுறையிலுள்ள சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ஜே.கே.ஏ. சிறிநாத தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement