இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என அழைப்பு விடுத்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு ஆதரவாக மல்லாவி வர்த்தக சங்கமும் வர்த்தக நிலையங்களை பூட்டி ஆதரவு தெரிவிப்பதாக மல்லாவி வர்த்தக சங்கத்தின் தலைவர் விஜயகுமார் தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார், மேலும் தெரிவித்ததாவது
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கடந்த 29 அன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இலங்கையின் சுதந்திர தினத்தை கரி நாளாக அடையாளப்படுத்தி போராட்டங்களை முன்னெடுக்க அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பினையும் கேட்டு நின்றனர்.
இந்த நிலையில் குறித்த மாணவர்களின் கோரிக்கைக்கமைவாகவும் இலனகி சுதந்திர தினத்தை கரி நாளாக ஏற்று எதிர்வரும் 04.02.2026 அன்று மல்லாவி வணிகர் மன்றத்தினராகிய நாம் எமது பகுதிகளுக்குற்பட்ட சகல வணிகர் மன்றங்களையும் பூட்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றோம் என்று தெரிவித்தார்.
சுதந்திரதினத்தை கரிநாளாக அடையாளப்படுத்தும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு மல்லாவி வர்த்தக சங்கம் ஆதரவு இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என அழைப்பு விடுத்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு ஆதரவாக மல்லாவி வர்த்தக சங்கமும் வர்த்தக நிலையங்களை பூட்டி ஆதரவு தெரிவிப்பதாக மல்லாவி வர்த்தக சங்கத்தின் தலைவர் விஜயகுமார் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார், மேலும் தெரிவித்ததாவதுயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கடந்த 29 அன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இலங்கையின் சுதந்திர தினத்தை கரி நாளாக அடையாளப்படுத்தி போராட்டங்களை முன்னெடுக்க அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பினையும் கேட்டு நின்றனர். இந்த நிலையில் குறித்த மாணவர்களின் கோரிக்கைக்கமைவாகவும் இலனகி சுதந்திர தினத்தை கரி நாளாக ஏற்று எதிர்வரும் 04.02.2026 அன்று மல்லாவி வணிகர் மன்றத்தினராகிய நாம் எமது பகுதிகளுக்குற்பட்ட சகல வணிகர் மன்றங்களையும் பூட்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றோம் என்று தெரிவித்தார்.