• May 22 2026

தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற சொகுசு பஸ் விபத்து - 15 பேர் காயம்!

Chithra / Sep 16th 2025, 12:55 pm
image


இரத்தினபுரி - ஹொரணை வீதியில் எபிடவல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை  காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற சொகுசு பஸ் ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது சொகுசு பஸ்ஸில் பயணித்த 15 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக இடங்கொட மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற சொகுசு பஸ் விபத்து - 15 பேர் காயம் இரத்தினபுரி - ஹொரணை வீதியில் எபிடவல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை  காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற சொகுசு பஸ் ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தின் போது சொகுசு பஸ்ஸில் பயணித்த 15 பேர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக இடங்கொட மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement