வீதியை விட்டு விலகிய லொறி ஒன்று வீதியின் அருகேயிருந்த வாய்க்கால் வடிகாலில் பாய்ந்துள்ளது.
மஸ்கெலியா நோர்வூட் பிரதான நெடுஞ்சாலையில் கோர்த்தி பகுதியில் நேற்று இரவு 9 மணிக்கு குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குறித்த பகுதிக்கு சாலை செப்பனிடும் காபட் மிக்ஸர் ஏற்றிக் கொண்டு வந்த டிப்பர் ரக லொறி ஒன்று சென்றுள்ளது.
திடிரென வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி, வீதியை விட்டு விலகி வடிகாலில் விழுந்தது. இதனால் குறித்த பகுதியில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது என்று நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், வடிகாலில் விழுந்த லொறியை மீட்டு போக்குவரத்து நடவடிக்கைகளை சீர் செய்தனர்.
வீதியை விட்டு விலகி வடிகாலில் விழுந்த லொறி ; 2 மணிநேரம் தடைப்பட்ட போக்குவரத்து வீதியை விட்டு விலகிய லொறி ஒன்று வீதியின் அருகேயிருந்த வாய்க்கால் வடிகாலில் பாய்ந்துள்ளது. மஸ்கெலியா நோர்வூட் பிரதான நெடுஞ்சாலையில் கோர்த்தி பகுதியில் நேற்று இரவு 9 மணிக்கு குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த பகுதிக்கு சாலை செப்பனிடும் காபட் மிக்ஸர் ஏற்றிக் கொண்டு வந்த டிப்பர் ரக லொறி ஒன்று சென்றுள்ளது. திடிரென வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி, வீதியை விட்டு விலகி வடிகாலில் விழுந்தது. இதனால் குறித்த பகுதியில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது என்று நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், வடிகாலில் விழுந்த லொறியை மீட்டு போக்குவரத்து நடவடிக்கைகளை சீர் செய்தனர்.