• Apr 14 2026

கட்டுப்பாட்டை இழந்த லொறி வீட்டில் மோதி விபத்து!

shanu / Apr 1st 2026, 8:46 pm
image

லொறி ஒன்று வீதியை விட்டு விலகி வீடொன்றில் மோதி இன்று மாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. 


விபத்துச் சம்பவம் நுவரெலியா - பழைய உடப்புசல்லாவ வீதியில் வனப் பாதுகாப்புத் திணைக்கள அலுவலகத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது. 


குறித்த லொறி நுவரெலியா மாநகர சபைக்கு சொந்தமான கழிவு அகற்றும் லொறி என தெரியவந்துள்ளது. 


இதன்போது லொறியின் சாரதியும், அதன் நடத்துனர் இருவரும் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். 


விபத்து தொடர்பாக நுவரெலியா போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கட்டுப்பாட்டை இழந்த லொறி வீட்டில் மோதி விபத்து லொறி ஒன்று வீதியை விட்டு விலகி வீடொன்றில் மோதி இன்று மாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துச் சம்பவம் நுவரெலியா - பழைய உடப்புசல்லாவ வீதியில் வனப் பாதுகாப்புத் திணைக்கள அலுவலகத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது. குறித்த லொறி நுவரெலியா மாநகர சபைக்கு சொந்தமான கழிவு அகற்றும் லொறி என தெரியவந்துள்ளது. இதன்போது லொறியின் சாரதியும், அதன் நடத்துனர் இருவரும் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பாக நுவரெலியா போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement