• May 23 2026

பொலிஸ் அதிகாரியைக் கொலை செய்ய முயன்றவருக்கு கடூழிய சிறை

Chithra / Oct 3rd 2025, 9:24 am
image


பொலிஸ் அதிகாரி ஒருவரை வாகனத்தில் மோதி கொலை செய்ய முயற்சித்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்த ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

போதைப்பொருள் கடத்தல்காரரான குறித்த நபர், சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு தெஹிவளை நெதிமால பகுதியில் போதைப்பொருள் சோதனையில் பங்கேற்று வந்த பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரி ஒருவரையே இவ்வாறு வாகனத்தில் மோதி கொலை செய்ய முயன்றுள்ளார். 

அதன்படி, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன நேற்று அந்த நபருக்கு இந்தத் தண்டனையை விதித்துள்ளார். 

அத்துடன், குறித்த பிரதிவாதிக்கு 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. 

பிரதிவாதி செய்த செயல்களை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும், அதன்படி, அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்படுவதாக தீர்ப்பை அறிவித்த நீதிபதி லங்கா ஜயரத்ன மேலும் குறிப்பிட்டார்.

பொலிஸ் அதிகாரியைக் கொலை செய்ய முயன்றவருக்கு கடூழிய சிறை பொலிஸ் அதிகாரி ஒருவரை வாகனத்தில் மோதி கொலை செய்ய முயற்சித்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்த ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல்காரரான குறித்த நபர், சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு தெஹிவளை நெதிமால பகுதியில் போதைப்பொருள் சோதனையில் பங்கேற்று வந்த பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரி ஒருவரையே இவ்வாறு வாகனத்தில் மோதி கொலை செய்ய முயன்றுள்ளார். அதன்படி, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன நேற்று அந்த நபருக்கு இந்தத் தண்டனையை விதித்துள்ளார். அத்துடன், குறித்த பிரதிவாதிக்கு 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. பிரதிவாதி செய்த செயல்களை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும், அதன்படி, அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்படுவதாக தீர்ப்பை அறிவித்த நீதிபதி லங்கா ஜயரத்ன மேலும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement