லெபனானும் இஸ்ரேலும் 10 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த போர்நிறுத்தம் (EST) மாலை 17:00 மணிக்கு (22:00 BST) ஆரம்பமாகவுள்ளது.
இரு நாடுகளின் தலைவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்தத் தீர்மானத்தின் மூலம் பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல் தற்காலிகமாகத் தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போர்நிறுத்தம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் இரு தரப்பினரும் தாக்குதல்களைத் தவிர்ப்பதற்கு உடன்பட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லெபனான் - இஸ்ரேல் இடையே 10 நாட்கள் போர் நிறுத்தம் - ட்ரம்ப் அறிவிப்பு லெபனானும் இஸ்ரேலும் 10 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த போர்நிறுத்தம் (EST) மாலை 17:00 மணிக்கு (22:00 BST) ஆரம்பமாகவுள்ளது. இரு நாடுகளின் தலைவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டதாக அவர் மேலும் கூறியுள்ளார்.இந்தத் தீர்மானத்தின் மூலம் பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல் தற்காலிகமாகத் தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது. போர்நிறுத்தம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் இரு தரப்பினரும் தாக்குதல்களைத் தவிர்ப்பதற்கு உடன்பட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.