• Aug 23 2025

தேசிய பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டப் பாடம் - வலியுறுத்தும் சட்டத்தரணிகள்

Chithra / Aug 22nd 2025, 9:05 am
image

 

தேசிய பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டப் பாடத்தை இணைக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. 

பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எழுதிய கடிதத்தில், இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இதன்படி, சட்டம் அல்லது அதனுடன் தொடர்புடைய பாடத்தை ஆரம்ப கல்வித்தரத்தில் முதன்மை பாடமாகவும், உயர்தரத்தில் விருப்பத்துக்குரிய பாடமாகவும் அறிமுகப்படுத்துவதன் அவசியத்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

அத்துடன், பாடசாலை மட்டத்தில் சட்டக்கல்வி பொறுப்புள்ள மற்றும் தகவலறிந்த பிரஜைகளை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.  

பல்வேறு நாடுகள் ஏற்கனவே தங்கள் பாடசாலை பாடத்திட்டத்தில் சட்ட பாடத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.  

இந்தநிலையில், இலங்கையின் சட்ட மற்றும் கலாசார சூழலுடன் ஒத்துப்போகும் சட்ட கல்விக்கு முழுமையான ஆதரவை வழங்கத்தயார் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தேசிய பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டப் பாடம் - வலியுறுத்தும் சட்டத்தரணிகள்  தேசிய பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டப் பாடத்தை இணைக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எழுதிய கடிதத்தில், இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, சட்டம் அல்லது அதனுடன் தொடர்புடைய பாடத்தை ஆரம்ப கல்வித்தரத்தில் முதன்மை பாடமாகவும், உயர்தரத்தில் விருப்பத்துக்குரிய பாடமாகவும் அறிமுகப்படுத்துவதன் அவசியத்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அத்துடன், பாடசாலை மட்டத்தில் சட்டக்கல்வி பொறுப்புள்ள மற்றும் தகவலறிந்த பிரஜைகளை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.  பல்வேறு நாடுகள் ஏற்கனவே தங்கள் பாடசாலை பாடத்திட்டத்தில் சட்ட பாடத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.  இந்தநிலையில், இலங்கையின் சட்ட மற்றும் கலாசார சூழலுடன் ஒத்துப்போகும் சட்ட கல்விக்கு முழுமையான ஆதரவை வழங்கத்தயார் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement