யாழ்.கொடிகாமம் சந்தை பழக்கடை வியாபாரிகள் கடைகளை மூடி இன்று(08) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இம்மாதம் முதலாம் திகதி முதல் சந்தை வியாபார நடவடிக்கைகள், புதிதாக புனர்நிர்மாணம் செய்யப்பட்ட கட்டடத்தில் இயங்கி வருகிறது.
இருந்தபோதிலும் சில வியாபாரிகள் இன்னும் அந்த இடத்திற்கு வருகை தராமையால் புதிய இடத்திலுள்ள தங்களின் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து குறித்த வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த கட்டட தொகுதிக்கு நுகர்வோர் வருகை தராமையால் தங்களுடைய பழங்கள் அனைத்தும் பழுதடைந்துள்ளதாகவும் குற்றஞ் சாட்டுகின்றனர்.
இந்தநிலை தொடர்ந்தால் தாங்கள் மீண்டும் பழைய இடத்திற்கு செல்ல நேரிடும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கொடிகாமம் பழக்கடை வியாபாரிகள் போராட்டம் யாழ்.கொடிகாமம் சந்தை பழக்கடை வியாபாரிகள் கடைகளை மூடி இன்று(08) போராட்டத்தில் ஈடுபட்டனர்.இம்மாதம் முதலாம் திகதி முதல் சந்தை வியாபார நடவடிக்கைகள், புதிதாக புனர்நிர்மாணம் செய்யப்பட்ட கட்டடத்தில் இயங்கி வருகிறது. இருந்தபோதிலும் சில வியாபாரிகள் இன்னும் அந்த இடத்திற்கு வருகை தராமையால் புதிய இடத்திலுள்ள தங்களின் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து குறித்த வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.குறித்த கட்டட தொகுதிக்கு நுகர்வோர் வருகை தராமையால் தங்களுடைய பழங்கள் அனைத்தும் பழுதடைந்துள்ளதாகவும் குற்றஞ் சாட்டுகின்றனர்.இந்தநிலை தொடர்ந்தால் தாங்கள் மீண்டும் பழைய இடத்திற்கு செல்ல நேரிடும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.