• Jan 09 2026

மீசாலை ரயில் கடவையில் நடக்கவிருந்த பெரும் விபத்தை தடுத்து நிறுத்திய ஓட்டோ சாரதிகள்!

shanuja / Jan 8th 2026, 2:08 pm
image

மீசாலை சந்தி புகையிரதக் கடவையில் ஏற்படவிருந்த விபத்து ஒன்று முச்சக்கர வண்டி சாரதிகளால் தடுக்கப்பட்டுள்ளது.


இன்று குறித்த பகுதியில் ரயில் வந்துகொண்டிருக்கும்போது கூலர் வாகனமொன்று புகையிரத கடவையை கடக்க முற்பட்டுள்ளது. 


இதனை அவதானித்த மீசாலை தரிப்பிடத்தில் நின்ற முச்சக்கர வண்டி சாரதிகள் உடனடியாக செயற்பட்டு கூலர் வாகனத்தை மறித்தனர். இதன்போது புகையிரதமும் அந்நேரத்தில் பயணித்துள்ளது.

இதனால் அங்கு ஏற்படவிருந்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.


குறித்த கடவை கடந்த 7 நாட்களாக இயங்காத நிலையில் உள்ளது. இது தொடர்பாக புகையிரத திணைக்களத்திற்கு அறிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.


கடந்த காலங்களில் தொடர்ச்சியாக புகையிரத விபத்துகள் ஏற்பட்டு பல உயிர்கள் பறிபோன சம்பவங்கள் இடம்பெற்றும் புகையிரத திணைக்களம் இது குறித்து நடவடிக்கை எடுக்காமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.


மீசாலை ரயில் கடவையில் நடக்கவிருந்த பெரும் விபத்தை தடுத்து நிறுத்திய ஓட்டோ சாரதிகள் மீசாலை சந்தி புகையிரதக் கடவையில் ஏற்படவிருந்த விபத்து ஒன்று முச்சக்கர வண்டி சாரதிகளால் தடுக்கப்பட்டுள்ளது.இன்று குறித்த பகுதியில் ரயில் வந்துகொண்டிருக்கும்போது கூலர் வாகனமொன்று புகையிரத கடவையை கடக்க முற்பட்டுள்ளது. இதனை அவதானித்த மீசாலை தரிப்பிடத்தில் நின்ற முச்சக்கர வண்டி சாரதிகள் உடனடியாக செயற்பட்டு கூலர் வாகனத்தை மறித்தனர். இதன்போது புகையிரதமும் அந்நேரத்தில் பயணித்துள்ளது.இதனால் அங்கு ஏற்படவிருந்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.குறித்த கடவை கடந்த 7 நாட்களாக இயங்காத நிலையில் உள்ளது. இது தொடர்பாக புகையிரத திணைக்களத்திற்கு அறிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.கடந்த காலங்களில் தொடர்ச்சியாக புகையிரத விபத்துகள் ஏற்பட்டு பல உயிர்கள் பறிபோன சம்பவங்கள் இடம்பெற்றும் புகையிரத திணைக்களம் இது குறித்து நடவடிக்கை எடுக்காமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement