கனடாவில் 2022 இல் இடம்பெற்ற விபத்தில் தமிழ் குடும்பமொன்று உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமானவர் குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்த தமிழ் குடும்பத்திற்கு சரியான விதத்தில் நீதி வழங்கப்படவில்லை என போராட்டமொன்று கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
கனடாவில் 2022 இல் இடம்பெற்ற வாகனவிபத்தில் தாயும் அவரின் இரு பிள்ளைகளும் கொல்லப்பட்டனர்.
மேற்படி விபத்துக்கான தீர்ப்பு கடந்த கடந்த 17 ஆம் திகதி வழங்கப்பட்டது. இந்நிலையில் மூவர் மரணத்துக்கும் காரணமானவர் குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி அவரை விடுதலை செய்துள்ளது.
இதனால் பெரும் அதிருப்திக்கு ஆளாகிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2022 ஒக்டோபர் 12ம் திகதி மார்க்கம் வீதி எல்சன் வீதி சந்திப்பில் டிரக்கும் காரும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டது. மேற்படி விபத்தில் பிள்ளைகள் இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.தாயார் மருத்துவமனையில் கிசிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பதீரனா புவனேந்திரன், நெலுக்சனா புவனேந்திரன் மற்றும் ஸ்ரீரதி சண்முகநாதன் ஆகிய மூவரது மரணத்திற்குக் காரணமான இந்த விபத்து தொடர்பான வழக்கில் மில்டன் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய வாகன சாரதி வாகனம் செலுத்துவதில் அனுபவமிக்கவர் என்றும் கால நிலை காரணமாக நிலவிய அசாதாரண சூழ்நிலையே விபத்துக்கான காரணம் என்றும் குற்றவாளியை குற்றமற்றவர் என விடுதலை செய்ததோடு அவருக்கு எந்தவிதமான தண்டனையையும் வழங்காது விட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது குடும்ப அங்கத்தவர்கள் சகலரையும் இழந்த புவனேந்திரன் வழக்குக் குறித்தும் உயிரிழந்த தனது மனைவி மற்றும் பிள்ளைகளுக்காக தன்னுடன் இணையுமாறும் சமூக ஊடகங்கள் வாயிலாக அறிவித்திருந்தார். நீண்ட காலமாக வழக்கு விசாரணைகளுக்காகத் தனித்தே நீதிமன்றம் சென்று வந்தமையையும் தாயகம் சார் நலன்களுக்காக தான் செயற்பட்ட விடயங்கள் குறித்தும் பதிவிட்டிருந்தார்.
தனது குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் எனவும் தன்னோடு வந்து இணையுமாறும் அழைத்த அவரின் அழைப்புக்காகவே பெருந்திரளானோர் நீதிமன்றில் திரண்டிருந்தனர்.
மீண்டும் மேற்படி வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கனேடிய பாராளுமன்ற பிரதிநிதிகள் இதற்காக குரல்கொடுக்க வேண்டும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
மூவரின் உயிரிழப்புக்குக் காரணமான வாகன சாரதிக்கு 15 ஆண்டுகளுக்கு மேலான சிறைத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும் என்ற விதத்திலேயே மேற்படி வழக்கு தொடர்பான கருத்துக்கள் கடந்த காலங்களில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வாகன விபத்தில் கொல்லப்பட்ட தமிழ் குடும்பத்திற்கு மறுக்கப்பட்ட நீதி - கனடாவில் போராட்டம் கனடாவில் 2022 இல் இடம்பெற்ற விபத்தில் தமிழ் குடும்பமொன்று உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமானவர் குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த தமிழ் குடும்பத்திற்கு சரியான விதத்தில் நீதி வழங்கப்படவில்லை என போராட்டமொன்று கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.கனடாவில் 2022 இல் இடம்பெற்ற வாகனவிபத்தில் தாயும் அவரின் இரு பிள்ளைகளும் கொல்லப்பட்டனர். மேற்படி விபத்துக்கான தீர்ப்பு கடந்த கடந்த 17 ஆம் திகதி வழங்கப்பட்டது. இந்நிலையில் மூவர் மரணத்துக்கும் காரணமானவர் குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி அவரை விடுதலை செய்துள்ளது.இதனால் பெரும் அதிருப்திக்கு ஆளாகிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2022 ஒக்டோபர் 12ம் திகதி மார்க்கம் வீதி எல்சன் வீதி சந்திப்பில் டிரக்கும் காரும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டது. மேற்படி விபத்தில் பிள்ளைகள் இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.தாயார் மருத்துவமனையில் கிசிச்சை பலனின்றி உயிரிழந்தார்.பதீரனா புவனேந்திரன், நெலுக்சனா புவனேந்திரன் மற்றும் ஸ்ரீரதி சண்முகநாதன் ஆகிய மூவரது மரணத்திற்குக் காரணமான இந்த விபத்து தொடர்பான வழக்கில் மில்டன் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.விபத்தை ஏற்படுத்திய வாகன சாரதி வாகனம் செலுத்துவதில் அனுபவமிக்கவர் என்றும் கால நிலை காரணமாக நிலவிய அசாதாரண சூழ்நிலையே விபத்துக்கான காரணம் என்றும் குற்றவாளியை குற்றமற்றவர் என விடுதலை செய்ததோடு அவருக்கு எந்தவிதமான தண்டனையையும் வழங்காது விட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது குடும்ப அங்கத்தவர்கள் சகலரையும் இழந்த புவனேந்திரன் வழக்குக் குறித்தும் உயிரிழந்த தனது மனைவி மற்றும் பிள்ளைகளுக்காக தன்னுடன் இணையுமாறும் சமூக ஊடகங்கள் வாயிலாக அறிவித்திருந்தார். நீண்ட காலமாக வழக்கு விசாரணைகளுக்காகத் தனித்தே நீதிமன்றம் சென்று வந்தமையையும் தாயகம் சார் நலன்களுக்காக தான் செயற்பட்ட விடயங்கள் குறித்தும் பதிவிட்டிருந்தார்.தனது குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் எனவும் தன்னோடு வந்து இணையுமாறும் அழைத்த அவரின் அழைப்புக்காகவே பெருந்திரளானோர் நீதிமன்றில் திரண்டிருந்தனர்.மீண்டும் மேற்படி வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கனேடிய பாராளுமன்ற பிரதிநிதிகள் இதற்காக குரல்கொடுக்க வேண்டும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.மூவரின் உயிரிழப்புக்குக் காரணமான வாகன சாரதிக்கு 15 ஆண்டுகளுக்கு மேலான சிறைத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும் என்ற விதத்திலேயே மேற்படி வழக்கு தொடர்பான கருத்துக்கள் கடந்த காலங்களில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.