• May 23 2026

ஜமாலியா விளையாட்டு கழகத்திற்கு ஜின்னா ஞாபகார்த்த சாம்பியன்!

shanu / Oct 20th 2025, 1:47 pm
image

திருகோணமலை,ஜின்னா விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மறைந்த தமது கழக வீரர்களை நினைவுபடுத்தும் முகமாக இரண்டு நாள் உதைப்பந்தாட்ட சுற்று போட்டி கடந்த ஒக்டோபர் மாதம்18/ 19ஆம் திகதி  2025 ஆண்டு ஜின்னா நகர்  மைதானத்தில் நடைபெற்றது. 


இந்த போட்டியில் சுமார் 30 அணிகள் கலந்து கொண்டிருந்தன .இறுதி போட்டிக்காக ஜமாலியா விளையாட்டு கழகம் மற்றும் ரிங்கோ ஸ்டார் கழகம் தேர்வு செய்யப்பட்டன.  


இறுதிப் போட்டியில் பலப்பரீட்சையின் போது இரு அணிகளும் எவ்வித கோல்கள் போடாத நிலையில் போட்டி சமநிலையில் முடிந்த பின்னர் தண்டு உதை மூலம்  7-6 என்ற கோல் வித்தியாசத்தில் ஜமாலியா விளையாட்டு கழகம் ரிக்கோ ஸ்டார் கழகத்தை வீழ்த்தி சாம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது. 


சுற்றுப்போட்டி யின் சிறந்த கோல்காப்பாளராக என்.நப்ரீஸ் தெரிவு செய்யப்பட்டார் என ஜமாலியா விளையாட்டு கழகத்தின் பொருளாளர் மு.மு.முஹமட் முக்தார் தெரிவித்தார்.


ஜமாலியா விளையாட்டு கழகத்திற்கு ஜின்னா ஞாபகார்த்த சாம்பியன் திருகோணமலை,ஜின்னா விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மறைந்த தமது கழக வீரர்களை நினைவுபடுத்தும் முகமாக இரண்டு நாள் உதைப்பந்தாட்ட சுற்று போட்டி கடந்த ஒக்டோபர் மாதம்18/ 19ஆம் திகதி  2025 ஆண்டு ஜின்னா நகர்  மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சுமார் 30 அணிகள் கலந்து கொண்டிருந்தன .இறுதி போட்டிக்காக ஜமாலியா விளையாட்டு கழகம் மற்றும் ரிங்கோ ஸ்டார் கழகம் தேர்வு செய்யப்பட்டன.  இறுதிப் போட்டியில் பலப்பரீட்சையின் போது இரு அணிகளும் எவ்வித கோல்கள் போடாத நிலையில் போட்டி சமநிலையில் முடிந்த பின்னர் தண்டு உதை மூலம்  7-6 என்ற கோல் வித்தியாசத்தில் ஜமாலியா விளையாட்டு கழகம் ரிக்கோ ஸ்டார் கழகத்தை வீழ்த்தி சாம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது. சுற்றுப்போட்டி யின் சிறந்த கோல்காப்பாளராக என்.நப்ரீஸ் தெரிவு செய்யப்பட்டார் என ஜமாலியா விளையாட்டு கழகத்தின் பொருளாளர் மு.மு.முஹமட் முக்தார் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement