யாழ்ப்பாண பல்கலைக்கழகமானது தற்போது சிங்களமயமாக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஊடக பேச்சாளர் கவிதரன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல்வேறு துறை சார்ந்த விரிவுரைகள் எவ்வித எதிர்ப்பும் இன்றி ஆங்கில மொழிக்கு மாற்றப்பட்டு சிங்கள மாணவர்களை உள்ளடக்கி சிங்களமயமாக்கப்பட்டு வருகிறது.
இது மிகவும் ஒரு பாரதூரமான விடயமாக காணப்படுகிறது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் என்பது தமிழர்களுடைய ஒரு மரபுரிமை சின்னம்.
தமிழர்களின் போராட்டத்தின் ஒரு அடையாள சின்னம். தமிழர்களின் பண்பாட்டு ஒரு காவலரண். இப்படியான பல்கலைக்கழகத்தில் மேற்குறித்த மோசமான செயற்பாடுகளிடமிருந்து மாற்றம் வேண்டும் என்று கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் மாணவர்கள் மீது காட்டுகின்ற மாற்றம் இதுதானா? முன்னைய அரசாங்கத்திற்கும் இந்த அரசாங்கத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது? என தெரிவித்தார்
யாழ். பல்கலைக்கழகம் சிங்கள மயமாக்கப்பட்டு வருகிறது - அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட கவிதரன் யாழ்ப்பாண பல்கலைக்கழகமானது தற்போது சிங்களமயமாக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஊடக பேச்சாளர் கவிதரன் தெரிவித்துள்ளார்.நேற்றையதினம் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,பல்வேறு துறை சார்ந்த விரிவுரைகள் எவ்வித எதிர்ப்பும் இன்றி ஆங்கில மொழிக்கு மாற்றப்பட்டு சிங்கள மாணவர்களை உள்ளடக்கி சிங்களமயமாக்கப்பட்டு வருகிறது.இது மிகவும் ஒரு பாரதூரமான விடயமாக காணப்படுகிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழகம் என்பது தமிழர்களுடைய ஒரு மரபுரிமை சின்னம்.தமிழர்களின் போராட்டத்தின் ஒரு அடையாள சின்னம். தமிழர்களின் பண்பாட்டு ஒரு காவலரண். இப்படியான பல்கலைக்கழகத்தில் மேற்குறித்த மோசமான செயற்பாடுகளிடமிருந்து மாற்றம் வேண்டும் என்று கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் மாணவர்கள் மீது காட்டுகின்ற மாற்றம் இதுதானா முன்னைய அரசாங்கத்திற்கும் இந்த அரசாங்கத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது என தெரிவித்தார்