• May 13 2025

வெசாக் தினத்தை முன்னிட்டு யாழில் பொலிஸாரால் தன்சல் வழங்கல்

Thansita / May 12th 2025, 7:05 pm
image

பௌத்த மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக வெசாக் பண்டிகை காணப்படுகிறது. அந்தவகையில் நாடளாவிய ரீதியில் வெசாக் பண்டிகை சகோதரமொழி பேசும் பௌத்த மக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் யாழ். வட்டுக்கோட்டை பொலிசாரும் வெசாக் தினத்தை முன்னிட்டு இன்று மாலை பால் பாயாசம் வழங்கினர். 

வீதியில் சென்ற மக்களுக்கு இவ்வாறு பால் பாயாசம் வழங்கப்பட்டது. மக்களும் ஆர்வத்துடன் பால் பாயாசத்தை வாங்கி அருந்திச் சென்றதை அவதானிக்க முடிந்தது.

மேலும்,யாழ்.கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் இன்றையதினம் ஐஸ்கிறீம் தன்சல் வழங்கப்பட்டது.

பெளத்தர்களின் வெசாக் பூரணையை முன்னிட்டு மக்களுக்கு இலவசமாக  வழங்கப்பட்டது

கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி SADDSP IP டிசாநாயக்க தலைமையில் நண்பகல் வேளை இடம்பெற்ற இந்த நிகழ்வில் நிர்வாகப்பிரிவுப் பொறுப்பதிகாரி S.I தினேஸ் ,முறைப்பாட்டுப் பிரிவுப் பொறுப்பதிகாரி S.I.MB ரஜாவ்  மற்றும் கொடிகாமம் பொலிஸ் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு மக்களுக்கான ஐஸ்கிறீம் தன்சலை சிறப்பான முறையில் வழங்கியிருந்தனர்.வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு.கொஸ்தா தலைமையில் இடம்பெற்ற இந்த தன்சல் நிகழ்வு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

வெசாக் தினத்தை முன்னிட்டு யாழில் பொலிஸாரால் தன்சல் வழங்கல் பௌத்த மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக வெசாக் பண்டிகை காணப்படுகிறது. அந்தவகையில் நாடளாவிய ரீதியில் வெசாக் பண்டிகை சகோதரமொழி பேசும் பௌத்த மக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் யாழ். வட்டுக்கோட்டை பொலிசாரும் வெசாக் தினத்தை முன்னிட்டு இன்று மாலை பால் பாயாசம் வழங்கினர். வீதியில் சென்ற மக்களுக்கு இவ்வாறு பால் பாயாசம் வழங்கப்பட்டது. மக்களும் ஆர்வத்துடன் பால் பாயாசத்தை வாங்கி அருந்திச் சென்றதை அவதானிக்க முடிந்தது.மேலும்,யாழ்.கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் இன்றையதினம் ஐஸ்கிறீம் தன்சல் வழங்கப்பட்டது.பெளத்தர்களின் வெசாக் பூரணையை முன்னிட்டு மக்களுக்கு இலவசமாக  வழங்கப்பட்டதுகொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி SADDSP IP டிசாநாயக்க தலைமையில் நண்பகல் வேளை இடம்பெற்ற இந்த நிகழ்வில் நிர்வாகப்பிரிவுப் பொறுப்பதிகாரி S.I தினேஸ் ,முறைப்பாட்டுப் பிரிவுப் பொறுப்பதிகாரி S.I.MB ரஜாவ்  மற்றும் கொடிகாமம் பொலிஸ் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு மக்களுக்கான ஐஸ்கிறீம் தன்சலை சிறப்பான முறையில் வழங்கியிருந்தனர்.வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு.கொஸ்தா தலைமையில் இடம்பெற்ற இந்த தன்சல் நிகழ்வு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement