• Apr 21 2026

யாழ் ஆழியவளை சி.சி.த.க வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி !

Ziya / Jan 29th 2026, 2:35 pm
image

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு யா/ ஆழியவளை சி.சி.த.க வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்று(28) இடம் பெற்றுள்ளது.


யா/ஆழியவளை சி.சி.த.க.வித்தியாலய அதிபர் கந்தசாமி சிவநேசன் தலைமையில் பிற்பகல் 2.00 மணியளவில் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.


விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது


மாணவர்களுக்கான பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக்கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது


நிகழ்வின் பிரதம விருந்தினராக பருத்தித்துறை பிரதேச சபையின் உதவிப் பிரதேச செயலாளர் பசுபதி தயானந்தன் நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக யா/ பலாலி வடக்கு றோ.க.த.க பாடசாலையின் அதிபர் சபாரத்தினம் விஜயகுமார் மற்றும் வடமராட்சி வலயத்தின் தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் திருமதி வளர்மதி அம்பிகை பாகன் ஆகியோர் கலந்து கொண்டனர்


இல்ல மெய்வல்லுனர் போட்டியை கண்டு கழிப்பதற்காக பெற்றோர்கள் பழைய மாணவர்கள் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

யாழ் ஆழியவளை சி.சி.த.க வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு யா/ ஆழியவளை சி.சி.த.க வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்று(28) இடம் பெற்றுள்ளது.யா/ஆழியவளை சி.சி.த.க.வித்தியாலய அதிபர் கந்தசாமி சிவநேசன் தலைமையில் பிற்பகல் 2.00 மணியளவில் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானதுமாணவர்களுக்கான பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக்கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுநிகழ்வின் பிரதம விருந்தினராக பருத்தித்துறை பிரதேச சபையின் உதவிப் பிரதேச செயலாளர் பசுபதி தயானந்தன் நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக யா/ பலாலி வடக்கு றோ.க.த.க பாடசாலையின் அதிபர் சபாரத்தினம் விஜயகுமார் மற்றும் வடமராட்சி வலயத்தின் தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் திருமதி வளர்மதி அம்பிகை பாகன் ஆகியோர் கலந்து கொண்டனர்இல்ல மெய்வல்லுனர் போட்டியை கண்டு கழிப்பதற்காக பெற்றோர்கள் பழைய மாணவர்கள் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement