• Mar 05 2026

லெபனானில் இஸ்ரேலின் அதிரடி தாக்குதல் : 29,000 பேர் வெளியேற்றம்!

Ziya / Mar 4th 2026, 3:55 pm
image

லெபனானின் பால்பெக் (Baalbek) நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் மீது, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக ரொய்டர்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.


இதேவேளை, கடந்த சில நாட்களில் மாத்திரம், இஸ்ரேலிய தாக்குதல்களில் லெபனானில் 52ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன், 150ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்குப் பதிலடியாக, ஹிஸ்புல்லா அமைப்பு வட இஸ்ரேலில் உள்ள இராணுவ தளங்கள் மற்றும் ஹைஃபா (haifa) அருகே உள்ள ஏவுகணை பாதுகாப்பு தளங்கள் மீது ஆளில்லா மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.


அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் "Operation Lion's Roar" என்ற இராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா நிலைகள் மீதான தாக்குதல்களும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


அதேநேரம், இஸ்ரேலின் தொடர் வான்வழித் தாக்குதல்களால், தெற்கு லெபனான் மற்றும் பால்பெக் பகுதிகளிலிருந்து சுமார் 29,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

லெபனானில் இஸ்ரேலின் அதிரடி தாக்குதல் : 29,000 பேர் வெளியேற்றம் லெபனானின் பால்பெக் (Baalbek) நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் மீது, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக ரொய்டர்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.இதேவேளை, கடந்த சில நாட்களில் மாத்திரம், இஸ்ரேலிய தாக்குதல்களில் லெபனானில் 52ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன், 150ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்குப் பதிலடியாக, ஹிஸ்புல்லா அமைப்பு வட இஸ்ரேலில் உள்ள இராணுவ தளங்கள் மற்றும் ஹைஃபா (haifa) அருகே உள்ள ஏவுகணை பாதுகாப்பு தளங்கள் மீது ஆளில்லா மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் "Operation Lion's Roar" என்ற இராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா நிலைகள் மீதான தாக்குதல்களும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.அதேநேரம், இஸ்ரேலின் தொடர் வான்வழித் தாக்குதல்களால், தெற்கு லெபனான் மற்றும் பால்பெக் பகுதிகளிலிருந்து சுமார் 29,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement