ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரான் புதிய கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தான் வகுத்துள்ள வழித்தட மற்றும் பயண விதிமுறைகளை மீறும் கப்பல்களுக்கு அபராதம், தடுப்புக்காவல் அல்லது கப்பலை பறிமுதல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என ஈரான் தெரிவித்துள்ளது.
வளைகுடா நீரிணை தொடர்பான பயணங்களை நிர்வகிக்கும் நோக்கில் ஈரான் உருவாக்கியுள்ள புதிய அமைப்பான பாரசீக வளைகுடா நீரிணை ஆணையம், இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
கப்பல் உரிமையாளர்கள் மற்றும் சரக்கு உரிமையாளர்கள், வளைகுடா வழியாகப் பயணிக்கும்போது விதிமுறைகளுக்கு இணங்காததாக கருதப்படும் கப்பல்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை கவனமாகச் சரிபார்க்க வேண்டும் என்றும் ஆணையம் தனது X பதிவில் தெரிவித்துள்ளது.
உலகின் மிக முக்கியமான எண்ணெய் கடல்வழிகளில் ஒன்றான ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக தினமும் பெருமளவிலான எண்ணெய் மற்றும் எரிபொருள் சரக்குகள் கடத்தப்படுகின்றன.
இந்நிலையில், கப்பல்களின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஈரான் புதிய நிர்வாக அமைப்பை உருவாக்கி, விதிமுறைகளை மீறும் கப்பல்களுக்கு எதிராக நேரடி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருப்பது, பிராந்திய கடல்சார் பதற்றத்தை மேலும் அதிகரிக்கக்கூடியதாக பார்க்கப்படுகிறது.
ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்துக்கான ஈரானின் புதிய கட்டுப்பாடுகள், சர்வதேச கப்பல் நிறுவனங்களுக்கு தற்போது புதிய சவாலாக மாறியுள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானின் கிடுக்குபிடி ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரான் புதிய கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.தான் வகுத்துள்ள வழித்தட மற்றும் பயண விதிமுறைகளை மீறும் கப்பல்களுக்கு அபராதம், தடுப்புக்காவல் அல்லது கப்பலை பறிமுதல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என ஈரான் தெரிவித்துள்ளது.வளைகுடா நீரிணை தொடர்பான பயணங்களை நிர்வகிக்கும் நோக்கில் ஈரான் உருவாக்கியுள்ள புதிய அமைப்பான பாரசீக வளைகுடா நீரிணை ஆணையம், இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.கப்பல் உரிமையாளர்கள் மற்றும் சரக்கு உரிமையாளர்கள், வளைகுடா வழியாகப் பயணிக்கும்போது விதிமுறைகளுக்கு இணங்காததாக கருதப்படும் கப்பல்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை கவனமாகச் சரிபார்க்க வேண்டும் என்றும் ஆணையம் தனது X பதிவில் தெரிவித்துள்ளது.உலகின் மிக முக்கியமான எண்ணெய் கடல்வழிகளில் ஒன்றான ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக தினமும் பெருமளவிலான எண்ணெய் மற்றும் எரிபொருள் சரக்குகள் கடத்தப்படுகின்றன.இந்நிலையில், கப்பல்களின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஈரான் புதிய நிர்வாக அமைப்பை உருவாக்கி, விதிமுறைகளை மீறும் கப்பல்களுக்கு எதிராக நேரடி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருப்பது, பிராந்திய கடல்சார் பதற்றத்தை மேலும் அதிகரிக்கக்கூடியதாக பார்க்கப்படுகிறது.ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்துக்கான ஈரானின் புதிய கட்டுப்பாடுகள், சர்வதேச கப்பல் நிறுவனங்களுக்கு தற்போது புதிய சவாலாக மாறியுள்ளது.