இலங்கையின் தெற்கு கடற்பரப்பிற்கு அப்பால் சர்வதேசக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானிய போர் கப்பலிலிருந்து, சுமார் 80 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தாக்குதலின் தீவிரத்தை விளக்கும் வகையில் இலங்கையிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகத்தினால் கடலில் இருந்து பெறப்பட்ட வீடியோக் காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கையின் தெற்கு கடற்பரப்பிற்கு அப்பால் சர்வதேசக் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான 'IRIS Dena' என்ற போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று ஏவுகணைத் தாக்குதல் மூலம் மூழ்கடித்திருப்பதை அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
வாஷிங்டனில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர்,
சர்வதேசக் கடற்பரப்பில் தாம் பாதுகாப்பாக இருப்பதாக ஈரான் கருதிய போதிலும், அமெரிக்காவின் விரைவுத் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றினால் ஏவப்பட்ட ஒரேயொரு 'மார்க் 48' ரக ஏவுகணை (Torpedo) மூலம் குறித்த கப்பல் வெற்றிகரமாக மூழ்கடிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எதிரிக் கப்பல் ஒன்று ஏவுகணைத் தாக்குதல் மூலம் மூழ்கடிக்கப்படுவது இதுவே முதல் முறை எனச் சுட்டிக்காட்டிய அவர், அமெரிக்காவின் உலகளாவிய பாதுகாப்பு எல்லையை இது பறைசாற்றுவதாகவும் குறிப்பிட்டார்.
இந்தத் தாக்குதல் இடம்பெற்ற போது ஈரானியப் போர்க்கப்பலில் சுமார் 180 பணியாளர்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்படும் நிலையில், கப்பலில் இருந்து பெறப்பட்ட ஆபத்து கால சமிக்ஞையை அடுத்து இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து மீட்புப் பணிகளை முன்னெடுத்தன.
இந்த மீட்பு நடவடிக்கையின் போது இதுவரை 32 பணியாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டு காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எஞ்சிய பணியாளர்கள் காணாமல் போயுள்ள நிலையில், சுமார் 80 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2026 சர்வதேச கடற்படை அணிவகுப்பு விழாவில் (International Fleet Review) கலந்து கொண்டு இந்தியாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த ஈரான் போர்க்கப்பல் IRIS Dena, இலங்கையின் தெற்கு கடற்கரைக்கு அருகில் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஆசியக் கடற்பரப்பில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் பிராந்திய ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை "எமக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய நாங்கள் விபத்து நடந்த இடத்திற்குச் சென்ற போது, ஒரு பெரிய எண்ணெய் படலத்தை மாத்திரமே காண முடிந்தது. எனவே அந்தக் கப்பல் மூழ்கிவிட்டது எனக் கூற முடியும்.
எவ்வாறாயினும், இலங்கை கடற்படையினர் இதுவரை கப்பலில் இருந்த 32 பேரை மீட்டு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அவர்களிடமிருந்து தகவல்களைப் பெற்ற பின்னரே மேலதிக விபரங்களைக் கூற முடியும். கடலில் மிதக்கும் பல உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கண்டெடுக்கப்பட்ட உடல்கள் கப்பல் பணியாளர்களின் உடல்களாக இருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.
நாங்கள் முதன்மையாக விபத்துக்குள்ளான கப்பலில் பயணித்தவர்களின் உயிர்களைக் காப்பாற்றுவதைப் பார்க்கிறோம். அப்போதுதான் இது எப்படி நடந்தது என்பது குறித்த விசாரணை மற்றும் தொழில்நுட்ப அறிக்கையைப் பெற முடியும்.
மற்றவர்கள் உயிருடன் இருந்தால் அவர்களை மீட்பதே எங்கள் முக்கிய கவனம். இந்தக் கப்பலில் எத்தனை பேர் காணாமல் போனார்கள் என்பது தொடர்பில் அறியத்தருவோம்.” என கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு அருகில் மூழ்கடிக்கப்பட்ட ஈரானியக் கப்பல்; 80 உடல்கள் மீட்பு - பலர் மாயம் இலங்கையின் தெற்கு கடற்பரப்பிற்கு அப்பால் சர்வதேசக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானிய போர் கப்பலிலிருந்து, சுமார் 80 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தாக்குதலின் தீவிரத்தை விளக்கும் வகையில் இலங்கையிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகத்தினால் கடலில் இருந்து பெறப்பட்ட வீடியோக் காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கையின் தெற்கு கடற்பரப்பிற்கு அப்பால் சர்வதேசக் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான 'IRIS Dena' என்ற போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று ஏவுகணைத் தாக்குதல் மூலம் மூழ்கடித்திருப்பதை அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். வாஷிங்டனில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், சர்வதேசக் கடற்பரப்பில் தாம் பாதுகாப்பாக இருப்பதாக ஈரான் கருதிய போதிலும், அமெரிக்காவின் விரைவுத் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றினால் ஏவப்பட்ட ஒரேயொரு 'மார்க் 48' ரக ஏவுகணை (Torpedo) மூலம் குறித்த கப்பல் வெற்றிகரமாக மூழ்கடிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எதிரிக் கப்பல் ஒன்று ஏவுகணைத் தாக்குதல் மூலம் மூழ்கடிக்கப்படுவது இதுவே முதல் முறை எனச் சுட்டிக்காட்டிய அவர், அமெரிக்காவின் உலகளாவிய பாதுகாப்பு எல்லையை இது பறைசாற்றுவதாகவும் குறிப்பிட்டார்.இந்தத் தாக்குதல் இடம்பெற்ற போது ஈரானியப் போர்க்கப்பலில் சுமார் 180 பணியாளர்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்படும் நிலையில், கப்பலில் இருந்து பெறப்பட்ட ஆபத்து கால சமிக்ஞையை அடுத்து இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து மீட்புப் பணிகளை முன்னெடுத்தன. இந்த மீட்பு நடவடிக்கையின் போது இதுவரை 32 பணியாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டு காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய பணியாளர்கள் காணாமல் போயுள்ள நிலையில், சுமார் 80 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2026 சர்வதேச கடற்படை அணிவகுப்பு விழாவில் (International Fleet Review) கலந்து கொண்டு இந்தியாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த ஈரான் போர்க்கப்பல் IRIS Dena, இலங்கையின் தெற்கு கடற்கரைக்கு அருகில் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஆசியக் கடற்பரப்பில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் பிராந்திய ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதேவேளை "எமக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய நாங்கள் விபத்து நடந்த இடத்திற்குச் சென்ற போது, ஒரு பெரிய எண்ணெய் படலத்தை மாத்திரமே காண முடிந்தது. எனவே அந்தக் கப்பல் மூழ்கிவிட்டது எனக் கூற முடியும். எவ்வாறாயினும், இலங்கை கடற்படையினர் இதுவரை கப்பலில் இருந்த 32 பேரை மீட்டு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அவர்களிடமிருந்து தகவல்களைப் பெற்ற பின்னரே மேலதிக விபரங்களைக் கூற முடியும். கடலில் மிதக்கும் பல உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கண்டெடுக்கப்பட்ட உடல்கள் கப்பல் பணியாளர்களின் உடல்களாக இருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.நாங்கள் முதன்மையாக விபத்துக்குள்ளான கப்பலில் பயணித்தவர்களின் உயிர்களைக் காப்பாற்றுவதைப் பார்க்கிறோம். அப்போதுதான் இது எப்படி நடந்தது என்பது குறித்த விசாரணை மற்றும் தொழில்நுட்ப அறிக்கையைப் பெற முடியும்.மற்றவர்கள் உயிருடன் இருந்தால் அவர்களை மீட்பதே எங்கள் முக்கிய கவனம். இந்தக் கப்பலில் எத்தனை பேர் காணாமல் போனார்கள் என்பது தொடர்பில் அறியத்தருவோம்.” என கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.