• Apr 15 2026

அமெரிக்கா முன்னெடுக்கும் தாக்குதல் ஈரான் கடும் கண்டனம்

dorin / Apr 3rd 2026, 5:44 pm
image

ஈரானின் சிவில் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து அமெரிக்கா முன்னெடுக்கும் தாக்குதல்களை ஈரான் கடுமையாகக் கண்டித்துள்ளது. 

தனது 'X' கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி, இத்தகைய தாக்குதல்கள் மூலம் ஈரானைப் பணிய வைக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். 

ஈரானின் பாலங்களை அழிப்பதுடன், மின் உற்பத்தி நிலையங்களையும் நிர்மூலமாக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி தனது 'ட்ரூத்'சமூக ஊடகக் கணக்கில் வெளியிட்டிருந்த கருத்திற்குப் பதிலடியாகவே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

"பாலங்கள் போன்ற பொதுக் கட்டமைப்புகளை இலக்காகக் கொள்வது எதிரியின் தோல்வியையும் தார்மீகச் சரிவையுமே காட்டுகிறது.

சேதமடைந்த எந்தவொரு உட்கட்டமைப்பையும் ஈரான் மீண்டும் கட்டியெழுப்பும்" என ஈரான் வெளியுறவு அமைச்சர் தனது பதிவில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கா முன்னெடுக்கும் தாக்குதல் ஈரான் கடும் கண்டனம் ஈரானின் சிவில் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து அமெரிக்கா முன்னெடுக்கும் தாக்குதல்களை ஈரான் கடுமையாகக் கண்டித்துள்ளது. தனது 'X' கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி, இத்தகைய தாக்குதல்கள் மூலம் ஈரானைப் பணிய வைக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். ஈரானின் பாலங்களை அழிப்பதுடன், மின் உற்பத்தி நிலையங்களையும் நிர்மூலமாக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி தனது 'ட்ரூத்'சமூக ஊடகக் கணக்கில் வெளியிட்டிருந்த கருத்திற்குப் பதிலடியாகவே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். "பாலங்கள் போன்ற பொதுக் கட்டமைப்புகளை இலக்காகக் கொள்வது எதிரியின் தோல்வியையும் தார்மீகச் சரிவையுமே காட்டுகிறது.சேதமடைந்த எந்தவொரு உட்கட்டமைப்பையும் ஈரான் மீண்டும் கட்டியெழுப்பும்" என ஈரான் வெளியுறவு அமைச்சர் தனது பதிவில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement