• Apr 15 2026

இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்

Chithra / Mar 7th 2026, 11:59 am
image

 

ஈரான் தனது புதிய கட்ட ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேல் மீது ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.


ஈரானில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள இஸ்ரேலிய இராணுவம், அவற்றை இடைமறித்து அழிப்பதற்கான வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் தற்போது செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.


அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் தொலைபேசிகளுக்கு அவசர எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.


மேலும், பாதுகாப்பு கட்டமைப்புகள் இயங்கி வருகின்றன" எனத் தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம், மக்களைப் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.


இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்  ஈரான் தனது புதிய கட்ட ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேல் மீது ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.ஈரானில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள இஸ்ரேலிய இராணுவம், அவற்றை இடைமறித்து அழிப்பதற்கான வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் தற்போது செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் தொலைபேசிகளுக்கு அவசர எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.மேலும், பாதுகாப்பு கட்டமைப்புகள் இயங்கி வருகின்றன" எனத் தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம், மக்களைப் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement