• Apr 14 2026

அஸர்பைஜான் மீதான தாக்குதலுடன் ஈரானுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை- ஈரான் ஜனாதிபதி!

Ziya / Mar 9th 2026, 11:52 am
image

அஸர்பைஜான் நாட்டின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலுக்கும் ஈரானுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.

அஸர்பைஜான் ஜனாதிபதி இல்தாம் அலியேவுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போதே அவர் இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

அண்மையில் நக்கிவன்பகுதியில் இடம்பெற்ற வான் தாக்குதல் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானியப் பொதுமக்களுக்கும் அஸபைஜான் ஜனாதிபதி மீண்டும் ஒருமுறை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

இதற்காக அஸர்பைஜானில் உள்ள ஈரானியத் தூதரகத்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியமைக்காக ஜனாதிபதி அலியேவுக்கு, மசூத் பெசெஷ்கியான் தனது நன்றியைத் தெரிவித்தார்.

நக்கிவன் பகுதியில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்து என்ன நடந்தது என்பதைத் துல்லியமாகக் கண்டறிவது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் முக்கியமானது என்பதையும் இதன்போது வலியுறுத்தினார்


அஸர்பைஜான் மீதான தாக்குதலுடன் ஈரானுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை- ஈரான் ஜனாதிபதி அஸர்பைஜான் நாட்டின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலுக்கும் ஈரானுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.அஸர்பைஜான் ஜனாதிபதி இல்தாம் அலியேவுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போதே அவர் இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார்.அண்மையில் நக்கிவன்பகுதியில் இடம்பெற்ற வான் தாக்குதல் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானியப் பொதுமக்களுக்கும் அஸபைஜான் ஜனாதிபதி மீண்டும் ஒருமுறை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.இதற்காக அஸர்பைஜானில் உள்ள ஈரானியத் தூதரகத்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியமைக்காக ஜனாதிபதி அலியேவுக்கு, மசூத் பெசெஷ்கியான் தனது நன்றியைத் தெரிவித்தார்.நக்கிவன் பகுதியில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்து என்ன நடந்தது என்பதைத் துல்லியமாகக் கண்டறிவது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் முக்கியமானது என்பதையும் இதன்போது வலியுறுத்தினார்

Advertisement

Advertisement

Advertisement